தீக்கதிர் விரைவு செய்திகள்
23 Jul 2026, 9:06 pm

தீக்கதிர் விரைவு செய்திகள்

“நாட்டில் குழந்தைகளை விட பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன”

ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜன நாயக கட்சியின் தலைவர் மெக பூபா முப்தி,”1947-க்குப் பிறகு நமது நாடு மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டுள்ளதாக நான் நம்பு கிறேன். தில்லியில் மாணவர்களுடன் இளைஞர்களும் இணைந்துள்ளனர். இன்று நம் நாட்டில் குழந்தைகள் பாது காப்பாக இல்லை, பசுக்கள்தான் பாது காப்பாக உள்ளன. நமது நீதித்துறையோ தன்னிடம் நேரமில்லை என்கிறது. இந்த மக்கள் இந்த வருத்தத்திற்கு எதிராகவும், இந்த அநீதிக்கு எதிராகவும் இன்று குரல் கொடுக்கவில்லை என்றால், 1947-க்கு முந்தைய காலத்தை விட நமது நாடு மோச மான நிலைக்குச் சென்றுவிடும் என்று நான் நம்புகிறேன். எனவே, மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென்றால், அதை இந்த மக்கள்தான் கொண்டு வருவார்கள். நாட்டில் ஜனநாயக சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், அதை இந்த மக்கள் தான் காப்பாற்றுவார்கள்” என அவர் கூறி னார்.

மகாராஷ்டிராவில் மாணவர்கள் பேரணி உத்தவ், ராஜ் தாக்கரே அறிவிப்பு

மோடி அரசுக்கு எதிராகப் போராடும் மாணவர் களுக்கு ஆதரவாக, மகா ராஷ்டிரா மும்பையில் வரும் ஞாயிற் றுக்கிழமை பேரணி நடத்தப்படும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் அறி வித்துள்ளனர். இதுதொடர்பாக இரு வரும் அளித்த பேட்டியில்,”போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, மோடி அரசு எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குகிறது. பணத்தை வைத்து எதிர்க்கட்சிகளை உடைக்கலாம் ; விலைக்கு வாங்க லாம்; ஆட்சியை கவிழ்க்கலாம். ஆனால் மோடியின் சதி மாணவர்கள் - இளைஞர் களிடம் எடுபடாது. படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் நிறைய வித்தியா சம் உள்ளது. மோடி அரசு கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என எச்ச ரித்துள்ளனர்.