தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யுரேனிய கொள்ளைக்கு எதிராக மேகாலயாவின் தீர்மானம்

27 Aug 2026, 9:47 pm
யுரேனிய கொள்ளைக்கு எதிராக மேகாலயாவின் தீர்மானம்

யுரேனிய கொள்ளைக்கு எதிராக மேகாலயாவின் தீர்மானம்

மேகாலயா மாநிலத்தில் யுரேனியம் அகழ்ந்தெடுக்கும் மற்றும் சுரங்கம் அமைக்கும்திட்டங்களுக்கு எதிராக மாநிலச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸி மாணவர் சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் முன்னெடுத்த தீவிரமானபோராட்டங்களின் அழுத்தத்தால், அங்கு ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகித்தாலும் கூட, இந்தத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின்தீவிர எதிர்ப்பால் யுரேனியம் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதும் மாநிலத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கமேகாலயா அரசு இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டுக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கும் இந்த மாநிலத்தின் எதிர்ப்பு, கனிம வளச் சுரண்டலுக்கு எதிரான மிகப்பெரியஎச்சரிக்கையாகும்.

ஆனால், இதற்கு நேர்மாறாக ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்தச் சட்டம்(MMDR Amendment Bill), மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் கொடிய சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் மூலம், கனிம வளங்கள் மற்றும்கனிமம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு இருந்த அதிகாரம் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளது. கனிம வளம் கொண்ட நிலங்களை “ஒழுங்குபடுத்தும்” அதிகாரத்தை ஒன்றிய அரசேதன்வசப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நிலத்தின்மீதான மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், மண்ணையும் மண்ணுக்குள் இருக்கும் பொன்னையும்அதானிஉள்ளிட்ட பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் கார்ப்பரேட் எதேச்சதிகாரத்தையும் மிகக் கூர்மையாக அம்பலப்படுத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கனிம வளங்கள் மீது வரிவிதிக்க மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உண்டுஎன வழங்கிய வரலாற்றுத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாகத் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ. 3,500 கோடி வரைவருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இணங்க லித்தியம், யுரேனியம் உள்ளிட்ட 24 முக்கியக் கனிமங்களைஅகழ்ந்தெடுப்பதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கருத்துக் கேட்புக்

கூட்டங்கள் நடத்தும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலம் காட்டிய உறுதிமிக்க எதிர்ப்பைப் போல, மாநிலங்களின் உரிமைகளையும் இயற்கை வளங்களையும் காக்க அனைத்துஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.