தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு 9 தங்கும் விடுதிகள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு சீல்

1 hour before
மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு 9 தங்கும் விடுதிகள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு சீல்
<p><strong>மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு 9 தங்கும் விடுதிகள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு சீல்</strong> </p><p>தேனி, ஜூலை 5- தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியை ஆக்கிர மித்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் 9 தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு களுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அவற்றுக்கான மின் இணைப்பு களும் துண்டிக்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அனுமதி யின்றி செயல்படும் தனியார் விடுதிகளால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும், வருசநாடு, மேகமலை, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிர மிப்பில் உள்ள வனப்பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, ஆண்டிபட்டி வருவாய்த் துறையினர், மேக மலை கிராமம் மற்றும் ஹைவேஸ் பேரூராட்சி பகுதி களில் வனத்துறை அனுமதியின்றி செயல்பட்டு வந்த 9 தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளர் குடி யிருப்புகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அவற்றின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளர் முத்தையா கூறுகையில், “தொழிலாளர்களின் குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறையினர் பல ஆண்டுகளாக அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தற்போதைய நடவடிக்கை மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை வெளி யேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஹைவேஸ், மேக மலை வனப்பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, உண்மை யான ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொழிலாளர்களின் குடியிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.