தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேகமலை வெளியேற்ற உத்தரவு: வன உரிமைச் சட்டம் சொல்வதென்ன? - கே.பாலபாரதி

2 Sept 2026, 8:54 pm
மேகமலை வெளியேற்ற உத்தரவு: வன உரிமைச் சட்டம் சொல்வதென்ன? - கே.பாலபாரதி

மேகமலை வெளியேற்ற உத்தரவு: வன உரிமைச் சட்டம் சொல்வதென்ன? - கே.பாலபாரதி

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகளில் உள்ள 98 கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நூறாண்டு காலமாக அம்மலைப் பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள், தங்கள் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் அச்சத்தில் உள்ளனர்.

இதன் பின்னணி, சட்ட அம்சங்கள், தீர்வுகள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் தொடர்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பின்னணியும்

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் வைகை ஆற்றுப் படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள காப்புக்காடுகளை (Reserved Forests) “ஆக்கிரமிப்புகளிலிருந்து” பாதுகாக்கக் கோரி, ஜான் கென்னடி மற்றும்பலர் தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. மேகமலை, வருசநாடு, கண்டமனூர், சின்னமனூர் உள்ளிட்டகாப்புக்காடுகளில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை 4,600-க்கும் மேற்பட்டோர் “ஆக்கிரமித்துள்ளதாக” மத்தியஅதிகாரம் பெற்ற குழுவும் (Central Empowered Committee – CEC), அரசுத் தரப்பும் தெரிவித்தன.

தீர்ப்பின் முக்கிய உத்தரவுகள்: காப்புக்காடுகளுக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்; வணிக ரீதியிலான இலவம்பஞ்சு (Silk Cotton) தோட்டங்கள், சட்டவிரோத விடுதிகள், கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்பு நிலங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்; கால அவகாசம் நீட்டிக்கப்படாது, தேவைப்பட்டால் துணை ராணுவப் படைகளைப்பயன்படுத்தி அகற்றலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது. இது மலை மக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் அச்சத்தை உருவாக்கியதால், விவசாயிகள் சங்கம், வன உரிமை அமைப்புகள், பல்வேறுஜனநாயக அமைப்புகள் இணைந்து இன்று வரை போராடி வருகின்றன.

2006 வன உரிமைச் சட்டம்

என்ன சொல்கிறது?பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்க, 2006-இல் ஒன்றிய அரசால்கொண்டுவரப்பட்டதே வன உரிமைச் சட்டம் (Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of ForestRights)Act – FRA). டிசம்பர் 13, 2005-க்கு முன்னர் குறைந்தது மூன்று தலைமுறைகளாக (75 ஆண்டுகள்) வன நிலங்களை வாழ்வாதாரத்துக்குச் சார்ந்து வாழும்பழங்குடியினருக்கும் பாரம்பரிய வனவாசிகளுக்கும் அந்நிலத்தின் மீதான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுமுதன்மை நிபந்தனை. வன உரிமைகளைத்தீர்மானிக்கும் முதல் அதிகாரம் கிராம சபைக்கே உள்ளது; கிராம சபையின் பரிந்துரைகளைத் துணை ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்து பட்டா சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும்,உரிமைகள் குறித்து கிராம சபைமுழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்கும் வரை பயனாளிகளை வன நிலத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்று சட்டம் தெளிவாக அறிவுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் அமல் ஆனதா?

வன உரிமைச் சட்ட (FRA) அமலாக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலம்என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. அரசு நிர்வாகம் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதே இதற்கு முக்கியக்காரணம். 2017 வரை, தமிழ்நாட்டில் 21,781 விண்ணப்பங்கள் பெறப்பட்டும் ஒரு பட்டா கூட வழங்கப்படவில்லை எனஒன்றிய பழங்குடியினர் நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மேகமலையில் உள்ள நொச்சி ஓடைபளியர் கிராமத்தில் 29 குடும்பங்களில் 18 பேருக்கு 2018, 2023-ல்தான் முதன்முறையாகப் பட்டா கிடைத்தது;மற்றவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர்.

இச்சட்டத்தின் கண்காணிப்புத் துறை பழங்குடியினர் நலத்துறையே தவிர வனத்துறை அல்ல; ஆனால் தமிழ்நாட்டில் வனத்துறைதான் இச்சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தது. ஓய்வுபெற்ற வனத்துறைஅதிகாரிகளே தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திராவில் இச்சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு பெற்றதால், 10 ஆண்டுகள் ஒரு பட்டா கூடவழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் குற்றம் சாட்டியது. வன உரிமை கோரிக்கையை முதலில் கிராம சபை சரிபார்த்து, பின் துணைக் கோட்டக் குழுவும் மாவட்டக் குழுவும்உறுதிசெய்ய வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் அந்த முதற்படியான சிறப்புக் கிராம சபைகளே மேகமலையில் 2026 ஆகஸ்ட் வரை நடத்தப்படவில்லை; வன உரிமை மனுக்களும் வழங்கப்படவில்லை. பிற பாரம்பரிய வனவாசிகள் (Other Traditional Forest Dwellers – OTFD) 75 ஆண்டு வாழ்வை நிரூபிக்கவேண்டும்; ஆவணம் இல்லாத மலைவாழ் மக்களுக்கு மூத்தோர் வாக்குமூலம், பழைய வாக்காளர் பட்டியல்,செயற்கைக்கோள் படம்மூலம் நிரூபிக்க அரசு வழிசெய்திருக்க வேண்டும் — செய்யவில்லை.

சட்டத்தை நீதிமன்றம்

கணக்கில் எடுத்ததா?கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நீடிக்கும் இந்தச்சிக்கலில், வன உரிமைச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்ததா என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம்மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் (CEC) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என ‘தி இந்து’ ஆய்வுக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. வனத்துறைத் தகவல், கள ஆய்வு, பழைய உயர்நீதிமன்ற உத்தரவுகளை வைத்தே அக்குழு அறிக்கை அளித்தது; ஆனால்சட்டத்தின் கீழ் எத்தனை விண்ணப்பம் நிலுவையில் உள்ளது, எத்தனை நிராகரிக்கப்பட்டது, ஏன் என்ற தரவைக்கேட்கவில்லை.

“சட்டத்தின் எல்லைக்கு வெளியே உள்ள ஆக்கிரமிப்பு எது என்ற தரவை எந்த அரசும் தரவில்லை; அதை நீதிமன்றமும் கேட்கவில்லை” என்றும்அக்கட்டுரை விமர்சிக்கிறது. வன உரிமைச் சட்டப்பிரிவு 4(5), “அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடியும் வரை எந்த வனவாசியையும் வெளியேற்றக் கூடாது” எனத் தெளிவாகச் சொல்கிறது; இதை மீறுவதுபட்டியலின சாதியினர்/பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். ஆனால் உச்சநீதிமன்றம் காலக்கெடுவுடன் வெளியேற்றத் திட்டம் போடச் சொன்னதோடு, அதிகாரிகளுக்கு வழக்குத்தொடர்வதிலிருந்து விலக்குப் பாதுகாப்பு கூட வழங்கியது சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.

மாநில அரசின் கடமை

மாநில அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது நம்பிக்கைக்குரியது. இருப்பினும், மறுசீராய்வின் விளைவுக்குக் காத்திராமல், தற்போதே வன உரிமை மனுக்கள் மூலம் சிறப்புக் கிராம சபைகளை நடத்தி, மூன்று தலைமுறைகளாக வாழும்பழங்குடியினரையும் இதர மக்களையும் கண்டறிவதுஉடனடிப் பணியாகும். புலிகள் சரணாலயம் உள்ளிட்ட வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அதே வேளையில், நூறாண்டுகாலமாக மலைப்பகுதியில் வாழும் மக்களின் நில உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்க்கவும்,2006 வன உரிமைச் சட்டத்தை விரைந்து அமல்படுத்தவும் மாநில அரசு உறுதியுடன் முன்வர வேண்டும். மக்களின் வாழ்வுரிமையையும் வன, வனவிலங்குப்பாதுகாப்பையும் ஒருசேரக் காக்கும் சமநிலையான தீர்வே இதற்குத் தேவை; விவசாயிகள் சங்கமும் வனஉரிமை அமைப்புகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.