தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காகிதக் கனவாகும் மெகா ஜவுளிப் பூங்காக்கள்!

8 Jul 2026, 8:13 pm
காகிதக் கனவாகும்  மெகா ஜவுளிப் பூங்காக்கள்!

காகிதக் கனவாகும் மெகா ஜவுளிப் பூங்காக்கள்!

இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பா கவும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுமார் 4.5 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங் கும் ஜவுளித்துறை இன்று ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம் பங்களிப்பை வழங்கும் இத்துறையின் 80 சதவீதம் உற்பத்தித் திறன், எளிய நடுத்தர மற்றும் சிறு, குறு நிறுவனங்க ளின் கைகளில்தான் உள்ளது.

2026-27 மத்திய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க முன்மொழிந்துள் ளார். ஏற்கெனவே பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகர் உள்ளிட்ட 7 இடங்களில் மெகா பூங்காக் கள் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. புதிய அறிவிப்புகள் கவர்ச்சிகர மாக இருந்தாலும், கடந்த கால கசப்பான உண்மை களை ஒன்றிய அரசு மூடிமறைக்கப் பார்க்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் லட்சணத்தை சிஏஜி அறிக்கை அப் பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அங்கீ கரிக்கப்பட்ட 50 பூங்காக்களில் 30 மட்டுமே செயல் பாட்டிற்கு வந்திருக்கின்றன. அதிலும் வெறும் 4 பூங்காக்கள் மட்டுமே முழுமையாக இயங்குகின் றன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உள்கட்ட மைப்பு குறைபாடுகளால் 43 சதவீதம் பூங்காக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செயல்பாட்டில் உள்ள பூங்காக்களும் தங்களின் முதலீட்டு இலக்கில் பாதியைக்கூட எட்டவில்லை; வேலைவாய்ப்பு இலக்குகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இவ்வளவு தோல்விகளையும் தொய்வுகளை யும் வைத்துக் கொண்டு, அரசு ஏன் புதிய புதிய மெகா திட்டங்களை நோக்கி ஓடுகிறது? சிறு, குறு தொழில்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்து வதிலும், அவர்களுக்குத் தேவையான பொது வான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தரக்கட்டுப் பாட்டு மையங்களை அமைப்பதிலும் ஒன்றிய அரசு காட்டும் அலட்சியம் அப்பட்டமாகத் தெரிகிறது.

கேள்வி என்னவென்றால், பாரம்பரியமாக ஜவுளித் தொழிலில் அனுபவம்மிக்க சிறு, குறு கிளஸ் டர்களை நவீனப்படுத்துவதை விடுத்து, பல்லாயிரக் கணக்கான கோடிகளைப் புதிய ‘பசுமை வழி’ மெகா பூங்காக்களுக்கு வாரியிறைப்பது யாருக்காக?

ஒரு மக்கள் நல அரசு என்பது அடித்தட்டு மக்களின் வேலைவாய்ப்பையும், சிறு தொழில் களின் பெருக்கத்தையும் இலக்காகக் கொண்டு இயங்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ உலகளாவிய முதலீட்டாளர்களையும் கார்ப்ப ரேட் நிறுவனங்களையும் திருப்திப்படுத்தும் ஒரு ‘கார்ப்பரேட் மேலாளர்’ போலச் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு வெறும் காகிதத்தோடு நின்றுவிடக் கூடாது. அதற்கு, புதிய அறிவிப்பு கள் என்ற மாய உலகை விட்டுவிட்டு, ஏற்கெனவே நலிவடைந்து வரும் சிறு, குறு ஜவுளித் தொழில் களைப் பாதுகாப்பதிலும், முந்தைய பூங்காக்க ளின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பதிலும் ஒன்றிய அரசு தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.