உழைப்பாளி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மெகா கிரிப்டோ மோசடி
6 Sept 2026, 10:00 pm

உழைப்பாளி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மெகா கிரிப்டோ மோசடி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எஃப் க்யூ எல் (FQL) மற்றும் வி.ஜி (VG) செயலிகள் மூலம் அரங்கேறியுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி, பல்லாயிரக்கணக்கான எளிய விவசாயிகளையும் கூலித் தொழிலாளர்களையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியுள்ளது. கிராமப்புற மக்களின்அறியாமையையும் எதிர்காலக் கனவு களையும் குறிவைத்து, குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறிநடத்தப்பட்ட இந்த அதிநவீனத் தொழில்நுட்பக் கொள்ளை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர், திண்டுக்கல் மாவட்டக்குழு சுட்டிக் காட்டியுள்ளபடி, வறட்சியும் கடுமையான வேலைவாய்ப்பின்மையும் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் தற்போதையசூழலில், இந்த நிதி மோசடி அவர்களை மீள முடியாத பொருளாதாரப் பாதாளத்தில் தள்ளியுள்ளது.

கட்டையம்பட்டியில் தொடங்கிய இந்த மோசடி சாம்ராஜ்யம், மேலூர், வாடிப்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில்நூற்றுக்கணக்கான எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சூறையாடியுள்ளது. நகைகளை அடகுவைத்தும்,வெளியில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் முதலீடு செய்த ஆயிரக்கணக் கான பெண்கள் இன்று வட்டிக் காரர்களின் கடுமையான மிரட்டல்களால் தற்கொலை விளிம்பில் தவித்து வருகின்றனர். கிரிப்டோ மிக்சர்கள் மற்றும் வெளிநாட்டுச் சர்வர்கள்மூலம் பணத்தின் தடங்களை மறைத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட எளிய மக்களின்வாழ்நாள் சேமிப்பு ஒரே இரவில் பறிபோயுள்ளது.

இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சிலரைக் கைது செய்து விசாரணை நடத்திவந்தாலும், இக்கொள்ளையின் பின்னணியில் உள்ள அனைத்து முக்கியக் குற்றவாளிகளையும் வலைவீசிக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவது அவசியமாகும். முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களைத் தீவிரமாகத் தடமறிந்து, முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையை மீட்டு, உரிய சட்ட நடைமுறைகளின்படிபாதிக்கப்பட்ட எளிய மக்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும். மேலும், கடன் தொல்லைகளாலும் வட்டி நெருக்கடிகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள குடும்பங்களைப் பாதுகாக்கச் சிறப்புத் தீர்வு முகாம்களைநடத்தி, மாநில அரசு உடனடி உளவியல் மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்கத் தகுந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அரசும் மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்த வேண்டும். வெறும் கிரிப்டோ மோசடியாகக் கடந்து போகாமல், உழைப்பாளி மக்களின் வியர்வைச் சிந்திச் சேர்த்த வாழ்நாள் சேமிப்பைமுழுமையாகமீட்டெடுப்பதையும், மோசடியில் தொடர்புடைய அனைவரும் கடுமையான சட்டத் தண்டனை பெறுவதையும் தமிழக அரசுஉறுதியாக நிறை வேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு தனது நடவடிக்கை களை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.