முந்தய பக்கம்

புலியை பிடிக்க மெகா கூண்டு வைப்பு

28 Nov 2025, 2:28 pm
புலியை பிடிக்க மெகா கூண்டு வைப்பு

புலியை பிடிக்க மெகா கூண்டு வைப்பு

உதகை, நவ.28- முதுமலை அருகே பழங்குடியின பெண்ணை வேட்டையாடிய புலியை பிடிக்க  20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த நவ.24 ஆம் தேதியன்று வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று நாகியம்மாள் (60) என்ற பெண்ணை வேட்டையாடிச் சென் றது. இதைத்தொடர்ந்து, அந்த புலியை கண்காணிக்க அமைக்கப்பட்ட கேமராவில், புலியின் நடமாட்டம் தெரியவந்தது. இந்நிலை யில், பழங்குடி பெண்ணை கொன்ற புலியை வனத்துறையினர் டிரோன் மூலம் கண்கா ணித்து வருகின்றனர். அதேபோல் 30 பேர்  கொண்ட குழு இரவு பகல் ரோந்துப் பணி யில் ஈடுபட்டு புலியை கண்காணித்து வரு கின்றனர்.  இரவு மற்றும் அதிகாலையில் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். அதேசமயம், மாவனல்லாவிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களை வனத்துறை வாகனங்களில் அழைத்துச் சென்று வருகின்றனர். ஆட் கொல்லி புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ள னர். இதற்காக 20 அடி நீளம் 10 அடி அக லம் கொண்டு கூண்டு புலி நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் அமைத் துள்ளனர். இந்த கூண்டில் உயிருடன் மாட்டை கட்டி வைத்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக புலியை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மாட் டின் வாசனையால் கவரப்படும் புலி கூண் டுக்குள் சிக்கும் என நம்பிக்கையுடன் தெரி வித்தனர்.

உதகையில் புலி உலா உதகை அருகே உள்ள சோலூர்

பகுதியில் குடியிருப்பு பகுதியில் நாள்தோறும், புலி ஒன்று உலா வரு கிறது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்தது மட்டுமின்றி அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, வனத் துறையினர் இந்த புலியை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram