வட மாநில தொழிலாளர்களிடம் குறை கேட்பு கூட்டம்
7 Feb 2026, 5:37 pm
<p><strong>வட மாநில தொழிலாளர்களிடம் குறை கேட்பு கூட்டம்</strong></p>
<p>நாமக்கல், பிப்.7- பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை ஆத்தி காட்டூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களிடம் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத் துள்ள வெப்படை சுற்று வட்டாரப் பகுதிகளில், நூற்றுக் கணக்கான நூற்ப்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பீகார், ஒடிசா, ஆந்திர, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங் களை சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் உணவகங்கள், பேக்கரிகள், கட்டுமான பணிகள் என பல்வேறு துறைகளில் வட மாநில தொழிலா ளர்கள் பணியாற்று வருகின்றனர். தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் சிலர் தங்கள் மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப் பட்ட போதை பொருட்களை சர்வ சாதாரணமாக கொண்டு வருவதும், அதை பயன்படுத்துவதும் மற்ற வர்களுக்கு விற்பனை செய்வதும் போன்றவற்றை ஒரு சிலர் செய்து வருகின்றனர். இதுகுறித்து வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வட மாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து வட மாநில தொழிலா ளர்களிடம் கருத்து கேட்கும் வகையில், பள்ளிபாளை யம் அடுத்துள்ள வெப்படை ஆத்திகாட்டூர் பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் காவல் கண்காணிப்பா ளர் விமலா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், கௌதம் ஆகியோர் கலந்து மற்றும் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
