முந்தய பக்கம்

பாரதிராஜாவுக்கு நினைவஞ்சலி

11 Jun 2026, 11:14 pm
பாரதிராஜாவுக்கு நினைவஞ்சலி
<p><strong>பாரதிராஜாவுக்கு நினைவஞ்சலி</strong></p><p>கோவை, ஜூன் 11- தமுஎகச சார்பில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு நினைவஞ்சலி கூட்டம் ஆவாரம் பாளையத்தில் நடைபெற்றது. தமிழ் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குந ரும், ”இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்டவரு மான பாரதிராஜா அவர்களுக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை கிழக்கு கிளை சார்பில் புதனன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஆவாரம்பாளையத்தில், ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி எதிரே அமைந் துள்ள அன்பு ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்நிகழ் வில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரி யாதை செலுத்தப்பட்டு, அவரின் கலைப்பணிக ளும், தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய மகத்தான பங்க ளிப்பும் நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் மு.காளிநாதன், மாவட்டச் செயலாளர் அ. கரீம், பொருளாளர் வெ. மைதிலி மற்றும் நிர்வாகிகள் ந.முத்து, ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram