சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு வேலூரில் ஆட்சியர் தலைமையில் கூட்டம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு வேலூரில் ஆட்சியர் தலைமையில் கூட்டம்</strong></p>
<p>வேலூர், டிச.9- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்டச் சரிபார்ப்புப் பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலைச் சரிபார்ப்புப் பணி டிசம்பர் 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் தொடங்கவுள்ளது என்று தெரிவித்தார். மாவட்டத்தில் தற்போது 1314 வாக்குச் சாவடிகள் உள்ளதாகவும், திருத்தப் பணிகள் முடிந்தபின்பு கூடுதலாக 113 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் ஏறக்குறைய 1427 வாக்குச்சாவடிகள் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தச் சாவடிகளுக்கான 125 சதவீதம் கூடுதல் கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units), விவிபிஏடி (VVPAT) இயந்திரங்கள் ஆகியவை பெல் (BEL) தொழிற்சாலைப் பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட உள்ளன. இந்தச் சரிபார்ப்புப் பணியின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு, மாதிரி சின்னம் பொருத்தும் பணி நடைபெறும். அதன்பிறகு, மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்ப்பு பணி நடைபெறும். எனவே, இந்தச் சரிபார்ப்புப் பணிக்கு அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களும் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார். முன்னதாக, ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள், தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசுப் பொறியியல் கல்லூரியில் வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், குடி யாத்தம், அணைக்கட்டு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
<p> </p>
