தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி
28 Feb 2026, 2:29 pm
<p><strong>தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், பிப். 28 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார் பில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரி மற்றும் ஏ.வி.பி டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி யில் தேசிய அறிவியல் தின சிறப்பு அறி வியல் கருத்தரங்கம் நடைபெற்றது. நோபல் பரிசு பெற்ற மறைந்த விஞ் ஞானி சர்.சி.வி ராமனின் கண்டுபி டிப்பின் நினைவாக ஒவ்வொரு ஆண் டும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறி வியல் தினமாக நாடு முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி, கல் லூரி மாணவர்களிடம் பல்வேறு செயல் பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பாக அறிவிய லில் பெண்கள் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதை மையப்ப டுத்தி அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக விஞ்ஞானியு டன் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு முறையே திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மக ளிர் கல்லூரியில் பேராசிரியர் பரிமளா ஒருங்கிணைப்பிலும், காந்திநகர் ஏவிபி டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளில் பள்ளி நிர்வாகத் தலைவர் கார்த் திகேயன் தலைமையிலும் நடை பெற்றது. இந்நிகழ்வுகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விஞ்ஞானி டாக்டர்.பரமசிவம் மற்றும் முதுநிலை விஞ்ஞானி டாக்டர்.சுந்தரே சன் பங்கு பெற்று மாணவர்களுடன் அறி வியல் கலந்துரையாடல்களை நிகழ்த்தி னர் இந்தியாவில் அறிவியலில் இளை ஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு குறித்தும், எதிர்வரும் காலங்களில் நவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக் கப்படுத்தும் விதமாகவும் பேசினர். இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாவட்டச் செயலாளர் திலக், மாநில செயற்குழு உறுப்பினர் கௌரி சங்கர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கண்ணன் உள்ளிட்ட அறிவியல் இயக்க பொறுப் பாளர்கள் பங்கேற்று, அறிவியல் இயக் கத்தின் சமூக பங்களிப்பை எடுத்துரைத் தனர். அழியாத உயிர் ஏவிபி பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மூலக்கூறு மரபணுத் துறை மூத்த விஞ்ஞானி ப.சுந்தரேசன் பங் கேற்று வருங்காலத்தில் அறிவியல் மற்றும் உடல் நலம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர், ஒரு வகை ஜெல்லி மீன் உயிரியல் ரீதி யாக அழியாது என்பது உண்மையா என கேள்வி கேட்டார். இந்த மாணவரைப் பாராட்டிய விஞ்ஞானி சுந்தரேசன், இது உண்மைதான் எனக்கூறினார். வெட்டிப் போட்டால் குட்டி போடும் தாவரம் போன்றே இந்த வகை ஜெல்லி மீன்க ளுக்கு இருதயம் இல்லை. ஒரு பகுதி அழிய அதன் அடுத்த பகுதி வளர்ந்து விடும். இதனால் இதற்கு அழிவில்லை என்று கூறினார். இரண்டு நாள் முன்பு காலமான நல்லகண்ணுவுக்கு வயது 101. இது நமக்கு அதிசயம். ஆனால் ஜப்பானில் 120 வயது வரை நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளனர். இதற்கு இவர்களின் உணவுப்பழக்கமே கார ணம். நாம் நமது உணவில் கார்போ ஹைட்ரேட்டை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். இதனைக்குறைத்து புரோட்டின் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.</p>
