தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

7 Oct 2026, 8:41 pm
விளையாட்டு

விளையாட்டு

‘வேண்டுமென்றே ரசிகர் மீது பந்தை அடிக்கவில்லை’ ​ரஷ்ய வீரர் மெத்வதேவ் விவகாரத்தில் புரளியைக் கிளப்பும் அமெரிக்கா

​2026-ஆம் ஆண்டிற்கான சீன ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால இந்த இறுதிப் போட்டியை விட அரையிறுதி ஆட்டம் தான் பரபரப்பாகவும், உலகின் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய போட்டியாகவும் டிரெண்டிங்கில் இன்று வரை உள்ளது.

ரசிகர் படுகாயம்

​இந்த அரையிறுதி ஆட்டத்தில் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்களான ஜோகோவிச் - ரஷ்ய வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினாலும், ஜோகோவிச் வெற்றிப் புள்ளிகளில் ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டம் 7-5, 5-3 என்ற செட் கணக்கில் சென்று கொண்டிருந்தது. அதாவது ஜோகோவிச் வெற்றியின் விளிம்பில் இருந்தார். அப்போது ரஷ்ய வீரர் மெத்வதேவ் ஜோகோவிச் பக்கம் பந்தை திருப்புவதை கோட்டைவிட்டார். அவர் அப்போது அதிருப்தி அடைந்ததாக தெரியில்லை. பந்தை விட்டதால் அவர் கோபமாக இருந்தது போன்ற சூழல் இல்லை. ஆனால் பந்து மீண்டும் ‘ரிட்டர்ன்’ ஆகி ரசிகர் மீது பட இருந்தது. இதனால் மெத்வதேவ் மேல்நோக்கி பந்தை திருப்பினார். சுமாரான வேகத்தில் சென்ற பந்து, மேல் பரணில் (பெவிலியன்) உள்ள ரசிகர் மீது பட்டது. இந்த சம்பவத்தில் ரசிகருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டது. பலத்த காயம் தான். ரசிகர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

நீக்கம்

​இந்த சம்பவத்தால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போட்டி நடுவரிடம் ஆலோசனை நடத்திய கள நடுவர், மெத்வதேவை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால் போட்டியில் இருந்து மெத்வதேவ் பாதிலேயே வெளியேறினார். அதோடு பிரச்சனை முடிந்துவிட்டது.

கொக்கரிப்பு

​ஆனால் அமெரிக்கா இந்த பிரச்சனையின் மூலம் ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு உலகை தவறாக வழிநடத்த முயன்று வருகிறது. “மெத்வதேவ் மிகப்பெரும் தவறு செய்துவிட்டார்; இது மோசமான சம்பவம்; அதனால் மெத்வதேவ் மற்றும் ரஷ்ய வீரர் - வீராங்கனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்” என அமெரிக்க டென்னிஸ் சம்மேளனத்தில் பணியாற்றும் வல்லுநர்கள், அதிகாரிகள் கொக்கரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சீன டென்னிஸ் சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சீன டென்னிஸ் சம்மேளனம் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. “விளக்கம் கேட்க அமெரிக்காவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?” என இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டது.

​ரஷ்யா என்றாலே அமெரிக்காவிற்கு பயம்

​டென்னிஸ் விளையாட்டில் ரஷ்யர்களைக் கண்டு அமெரிக்கா பயப்படுவது அனைவரும் அறிந்த விஷயம்தான். காரணம் ரஷ்யர்கள் அமெரிக்கர்களை விட நன்றாக மற்றும் போராட்டக் குணத்துடன் விளையாடக் கூடியவர்கள். முக்கியமான அல்லது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளிப்பதும் ரஷ்ய வீரர் - வீராங்கனைகள் தான் அதிகம்.

இதனால்தான் ரஷ்ய டென்னிஸ் சம்மேளனத்தை ஒடுக்க, உக்ரைன் போரைக் காரணம் காட்டி இன்று வரை ரஷ்ய கொடிக்கு (பெலாரஸ் சேர்த்து) அனுமதி மறுத்து வருகிறது. மேலும் ரஷ்யர்களை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இது போதியளவில் பலனளிக்கவில்லை. இதனால்தான் சீன ஓபன் டென்னிஸ் விவகாரத்தைக் கையிலெடுத்து ரஷ்ய டென்னிஸ் சம்மேளனத்திற்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.