ஊதியத்தை உயர்த்தி வழங்க மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை
21 Mar 2026, 2:42 pm
<p><strong>ஊதியத்தை உயர்த்தி வழங்க மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வேலையறிக்கையை மாநில பொதுச் செயலாளர் எஸ்.மகாலெட்சுமி வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை மாநில பொருளாளர் பி.சாய்சித்ரா வாசித்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவிப்பு சுற்றறிக்கை 168-இன்படி ஊதிய உயர்வை, வரும் மாதத்திலேயே உயர்த்தி வழங்க வேண்டும். தன்னார்வலர்கள் என்ற நிலையை மாற்றி முழுநேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசு, மாநில சுகாதாரத் துறைக்கான (என்எச்எம்) நிதி ஒதுக்கீட்டை 60 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் லோகேஸ்வரி, லெட்சுமி உள்பட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் ஜி.செல்வி நன்றி கூறினார்.</p>
