பணியை வரன்முறைப்படுத்தக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் மனு
10 Dec 2025, 4:08 pm
<p><strong>பணியை வரன்முறைப்படுத்தக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் மனு</strong></p>
<p>அரியலூர், டிச.10 - சிஐடியு சார்பில் அரியலூரில் மக்களைத் தேடி மருந்துவ ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், சுகாதார அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், “மாவட்டத்தில் 127 தன்னார்வலர்கள் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 2 மணி நேர பணிக்கு ரூ.5500-க்கு ஊக்கத்தொகைக்காக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தங்களை இரண்டு மணி நேரம் என்று கூறி வேலைக்கு எடுத்துவிட்டு, நாள் முழுவதும் அனைத்து பணிகளையும் செய்ய வலியுறுத்துகின்றனர். பிஏசி-க்கு பணி செய்ய அழைப்பது, ஸ்கோர் சீட் வழங்கச் சொல்வது, ஓசிஎஸ் கார்டு வழங்கி ஏற்றச் சொல்வது என பணிகளை சேர்த்துக் கொண்டே செல்கின்றனர். இதை கண்காணித்து தங்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ரூ. 5500-க்கு ஏற்ப பணியை வரன்முறைப் படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும், சுகாதார அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் செல்வி, மாவட்டச் செயலாளர் சங்கீதா, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
