தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

13 Mar 2026, 4:52 pm
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்  சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
<p><strong>மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் &nbsp;சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- &nbsp;மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், மாத ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகே மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர்(சிஐடியு) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகேஸ்வரி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் லட்சுமி, மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் செல்வி, திருச்சி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் மாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தினர். &nbsp;புதுக்கோட்டை &nbsp;புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கீதா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே. முகமதலிஜின்னா, பொருளாளர் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவர் முகமது கனி, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர். &nbsp;தஞ்சாவூர் &nbsp;தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை, இரண்டாவது நாளாக மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சாய் சித்ரா தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநில துணைத் தலைவர் சி. ஜெயபால் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ம.கண்ணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி கே. செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.