ரூ. 15 ஆயிரம் மாத ஊதியம் வேண்டும்! மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>ரூ. 15 ஆயிரம் மாத ஊதியம் வேண்டும்! மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சென்னை, ஜன. 28 - 15 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் கேட்டு புதனன்று (ஜன.28) சென்னையில், ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன் தொடங்கி வைத்தார். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாநிலத் துணைத் தலைவர்கள் எம். சந்திரன், எம். ஐடா ஹெலன், மாநிலச் செயலாளர் எம். தனலட்சுமி, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். மகாலட்சுமி, பொருளாளர் பி. சாய்சித்ரா, நிர்வாகி கலைச்செல்வி உள்ளிட் டோர் பேசினர். பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய லாளர் செந்தில்குமாருடன் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒன்றிய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன்பின் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு செயலாளர் செந்தில்குமார் உறுதி அளித்ததாக சங்கத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித் தார்.</p>
