ராணிப்பேட்டையில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>ராணிப்பேட்டையில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>ராணிப்பேட்டை, மார்ச் 12- மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வியாழனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகையை 5,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் மற்றும் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் தங்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செய லாளர் பி. மணி, விதொச மாவட்ட செய லாளர் பி. ரகுபதி, ஆர். மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீமதி, காயத்ரி, ஆனந்தி, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
