தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

12 Mar 2026, 4:20 pm
ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 12- மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்க ளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் மாதம் ரூ.5,500-ஐ ரூ.15 ஆயிரமாக உயர்த்தி &nbsp;வழங்க வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ &nbsp;ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று மாவட்ட &nbsp;சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவ லகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தி னர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க &nbsp;மாநில பொதுச் செயலாளர் எஸ்.மகாலட் சுமி தலைமையில் இந்த காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. இதில், மாத ஊக்கத் தொகை ரூ.5,500 என்பதை ரூ.15 ஆயிரமாக &nbsp;வழங்க வேண்டும். ஊழியர்கள் பெறும் ஊக் கத்தொகையை அவர்களின் வங்கி கணக் கில் நேரடியாக செலுத்த வேண்டும். ஊக்க &nbsp;தொகையில் துறை சார்ந்த செலவுகள் செய் யும் நிலையை தவிர்த்து, சுகாதா ரத்துறையே ஏற்றுக் கொள்ள வேண்டும். சுகா தாரத் துறையே நோட்டு, பேனா, பிபி அப்பே ரல்ஸ் பராமரிப்பு, மொபைல் போன் டேட்டா &nbsp;கார்டு கட்டணம், போக்குவரத்து படி உள்ளிட் டவைகளுக்கு கூடுதல் அலவன்ஸ் தீர்மா னித்து வழங்க வேண்டும். அனைத்து ஊழி யர்களுக்கும் திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி கொடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்கோர் கார்டு முறையை கைவிட &nbsp;வேண்டும். எந்தவித நியாயமான காரணமின்றி ஊழி யர்களுக்கு பணி மறுக்கக் கூடாது. தொழிற் தகராறு சட்டம் 1947 பிரிவு 33(4) ன் படி அனைத்து மாவட்டத்திலும் தலைமை தாங் கும் ஊழியர்களை பாதுகாக்கப்பட்ட தொழி லாளர்களாக கருத வேண்டும். ஊழியர்க ளின் நலன் காத்திட இஎஸ்ஐ., பிஎப். திட்டத்தை அமலாக்க வேண்டும். கருவுற்ற &nbsp;ஊழியர்களுக்கு மகப்பேறு கால சலுகைகள் &nbsp;வழங்க வேண்டும். பணிக்காலத்தில் விபத் தில் மரணமடைந்த ஊழியர்கள் குடும்பத் திற்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் தேசிய பண் டிகை மற்றும் வார விடுமுறை வழங்க வேண் டும். ஊழியர்களின் பணிகளை வரன்முறைப் படுத்தி வழிகாட்டும் குறிப்பை மாவட்ட டி.எச்.ஒ மற்றும் எம்.ஒ உள்ளிட்ட அனைவ ருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட &nbsp;புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வழங்க வேண் டும். மாத ஊக்கத்தொகை பிரதி மாதம் 5 ஆம் &nbsp;தேதி வழங்குவதை உறுதிப்படுத்த வேண் டும். ஊழியர்களை ஆரம்ப சுகாதா நிலையங் களில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்த கூடாது. &nbsp;அனைத்து ஊழியர்களுக்கும் வருடம் இரண்டு செட் சீருடை வழங்க வேண்டும். &nbsp;அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள &nbsp;அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட &nbsp;பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. முன்னதாக இந்த காத்திருப்புப் போராட் டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், துணைத் தலைவர் பி.பாலன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மக்களைத் தேடி &nbsp;மருத்துவ ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் &nbsp;மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் கே. ராஜேஸ்வரி, பொருளாளர் பானுபிரியா உள் ளிட்ட திரளான மக்களை தேடி மருத்துவ &nbsp;ஊழியர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.