முந்தய பக்கம்

செவிலியர் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு

24 Dec 2025, 6:25 pm
செவிலியர் போராட்டத்துக்கு  மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு

செவிலியர் போராட்டத்துக்கு  மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் ஆதரவு

தஞ்சாவூர், டிச.24-
தற்காலிக அடிப்படையில் பணி புரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு, எம்.ஆர்.பி செவிலியர்கள் 7 ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநில பொருளாளர் பி.சாய்சித்ரா மற்றும் நிர்வாகிகள் நந்தினி, சித்ரா, மாரியம்மாள், பரமேஸ்வரி, சூர்யா ஆகியோர் நேரில் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதி உதவியும் வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram