முந்தய பக்கம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் நிறைவு

13 Mar 2026, 4:52 pm
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் நிறைவு
<p><strong>மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் நிறைவு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 13- மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் இரண்டு &nbsp;நாள் காத்திருப்புப் போராட்டம் வெள்ளியன்று நிறைவடைந் தது. ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சிஐடியு மக்களைத் தேடி &nbsp;மருத்துவ ஊழியர் சங்கத்தினர் 2 நாட்கள் காத்திருப்புப் போராட்டத்தை வியாழனன்று துவங்கினர். தொடர்ந்து, 2 ஆவது நாளாக நடைபெற்ற போராட்டம் வெள்ளியன்று மாலை நிறைவடைந்தது. ஈரோடு மாவட்ட துணை இயக்கு நர் சுகாதாரப் பணிகள் அலுவலக வளாகத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.ரேவதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. தனலட்சுமி, பொருளாளர் கே.புவனேஸ்வரி, சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.மாரப்பன், தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத்தலைவர் என்.முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் முன்பு &nbsp;நடைபெற்ற போராட்டத்திற்கு, மாலதி தலைமை வகித்தார். &nbsp;இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, அரசு &nbsp;ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், உதவிச் செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட இடங் களிலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram