முந்தய பக்கம்

மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்

8 Dec 2025, 4:39 pm
மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்
<p><strong>மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்</strong></p> <p>சேலம், டிச.8- சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகாவில் உள்ள புழு திக்குட்டை கிராமத்தில், மலைவாழ் மக்களுக்கான இலவச &nbsp;மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம், குறவன் &nbsp;பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய &nbsp;முகாமிற்கு, பேராசிரியர் மருத்துவர் கருணாகரன் தலைமை &nbsp;வகித்தார். தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் திருப்புகழேந்தி வரவேற்புரையாற்றினார். இதில்,விவேகானந்தா மருத்து வக் கல்லூரி முதல்வர் டாக்டர் முருகேசன் முகாமின் நோக்கத் தை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க &nbsp;மாநிலத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு, மக்கள் நல் வாழ்வுக்கான மருத்துவ அரங்கத்தைச் சேர்ந்த மருத்து வர்கள் சிற்றரசு, பல் மருத்துவர் கார்த்திக் கண்ணன், மற்றும் &nbsp;தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சேட்டு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். இம்முகாமில், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் &nbsp;பரிசோதனை, இரத்த சர்க்கரைப் பரிசோதனை, இரத்த அழுத் தம் அளவிடுதல், மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். புழுதிக்குட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள மலைக் கிரா மங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் &nbsp;கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்க மாவட்டப் பொருளாளர் தினகரன் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram