முந்தய பக்கம்

மணமேல்குடியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம்

23 Dec 2025, 4:05 pm
மணமேல்குடியில்  மருத்துவ மதிப்பீட்டு முகாம்
<p><strong>மணமேல்குடியில் &nbsp;மருத்துவ மதிப்பீட்டு முகாம்</strong></p> <p>அறந்தாங்கி, டிச.23- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் &nbsp;தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் செழியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் &nbsp;சசிகுமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும், உதவித்தொகை குறித்தும் பேசப்பட்டது. &nbsp;குழந்தைகள் நல மருத்துவர் ஹேமலதா, எலும்பியல் மருத்துவர் சுப்பு சிவராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுனைத்கான், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, கண் மருத்துவர் நிஷானி மற்றும் மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலக பணியாளர் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள் மணிமேகலை மற்றும் கோவேந்தன், இயன் முறை மருத்துவர் &nbsp;செல்வகுமார், கணக்காளர்கள் கலைச்செல்வன், மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram