தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

13 Feb 2026, 5:58 pm
தொழில்நுட்ப கதிர்

ஏஐ சாட்பாட்-களின் மருத்துவ ஆலோசனைகள் நம்பகமானது அல்ல!

மருத்துவத் தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண் பெறும் திறன் இருந்தாலும், மனிதர் களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகளில் ஏஐ சாட்பாட்கள் துல்லியமாக இல்லை என ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை  Nature Medicine என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆக்ஸ்போர்டு இணைய நிறுவனம் (Oxford Internet Institute) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நபீல்ட் முதன்மை பராமரிப்பு சுகாதார அறி வியல் துறையின் (Nuffield Depart ment of Primary Care Health Sciences) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் OpenAI நிறு வனத்தின் GPT-4o, Meta நிறு வனத்தின் Llama 3 மற்றும் Command R+ உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் பரி சோதிக்கப்பட்டன. பித்தப்பைக் கற்கள், இரவு மது அருந்திய பிறகு ஏற்படும் தலைவலி உள்ளிட்ட 10 வகையான சுகாதார சூழல்களுக்கு ஆலோசனை கேட்கப்பட்டது. இதில்,  இங்கிலாந்தைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்றனர். ஆய்வு முடிவுகளின்படி, ஏஐ  சாட்பாட்கள் 45% பேருக்கு மட்டுமே  சரியான மருத்துவ ஆலோசனை களை வழங்கின. மீதமுள்ள 55%  பேருக்கு தவறான அல்லது முழுமை யற்ற ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதனால், ஏஐ சாட்பாட்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகள் முழுமையாக நம்பகமானவை அல்ல என்றும், தவறான பரிந்துரைகள் நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ் அப் வெப்பில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்!

வாட்ஸ் அப் வெப் தளத்தில் தற்போது, வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் அப் வெப் மூலம் செய்திகளை அனுப்புதல், கோப்புகளைப் பகிருதல் மற்றும் மீடியா கோப்புகளைப் பார்வையிடுதல் போன்ற வசதிகள் மட்டுமே வழங்கப்பட்டன. வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள விரும்புவோர் மொபைல் செயலி அல்லது பிரத்யேக டெஸ்க்டாப் செயலிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு, iOS மற்றும் பிற டெஸ்க்டாப் செயலிகளில் உள்ளதைப் போலவே, வாட்ஸ்அப் வெப்பிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட (end-to-end encrypted) வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள், மேலும் திரைப் பகிர்வு (Screen Sharing) வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சத்தின் மூலம், இனி டெஸ்க்டாப் செயலியை நிறுவாமல், நேரடியாக ப்ரவுசர் வழியாகவே பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட சில பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.