மேச்சேரியில் தீண்டாமை சுவர் குறித்த புகார் ததீஒமு நேரில் ஆய்வு செய்து அரசுக்கு கோரிக்கை
24 Sept 2026, 1:39 am

மேச்சேரியில் தீண்டாமை சுவர் குறித்த புகார் ததீஒமு நேரில் ஆய்வு செய்து அரசுக்கு கோரிக்கை

சேலம், செப்.23-சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையை அடைத்து, ஆதிக்கசாதி மனோபாவத்தோடு சுற்றுச்சுவர் அமைத்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள், அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீலா கரடு ஏ.ஆர். (ராமன் காலனி) பகுதியில் சுமார் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நான்கு தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள்கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து, ‘அம்மன் நகர்’ என்ற பெயரில் தனியார்வீட்டுமனை விற்பனையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரிய சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். பட்டியலின மக்கள் பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே இந்த சுவரை கட்டியுள்ளனர். இதன்காரணமாக, ஐந்தாவது மைல், வாளதாசன்பட்டி பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமன் காலனி மக்கள், தற்போது பாதை மறிக்கப்பட்டதால் சீலா கரடு பகுதியை சுற்றி காட்டுப்பாதையில் ஒத்தையடி வழியாக செல்ல வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. இதனல், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசியதேவைகளுக்காக செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி கோரி அரசிடம் பமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய மனு தொடர்பாக அதிகாரிகள் நேரில் விசாரிக்காமல் தொலைபேசியில் மட்டும் விசாரித்துள்ளனர். சேலம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் ஆட்சியரை சந்திக்க முடியவில்லை.மேலும், தனியார் வீட்டுமனை வளாகத்திற்குள் பஞ்சாயத்து சாலை இருப்பதாகவும், அதையும் பயன்படுத்த விடாமல் மிரட்டல் விடுப்பதாகவும், சிசிடிவி மூலம் கண்காணித்து தொந்தரவு செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டினர்.

அருகில் வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் இருப்பதால், சுற்றுச்சுவரில் அவர்களுக்காக சிறிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தனியார் நிறுவனம் ரூ.7 லட்சம் பெற்றதாகவும் மக்கள் தெரிவித்தனர். ஆனால் பட்டியலின மக்கள் பணம் கொடுக்கமுன்வந்தாலும் அந்த வழியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வழி வழங்கப்படுவது நவீன தீண்டாமை என குற்றம்சாட்டினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆய்வுஇந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வீ. இளங்கோ, மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல், சிபிஎம்மேச்சேரி ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து ஆகியோர் ஏ.ஆர். காலனியில் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வரவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஏதுவாக பிரதான சாலையை இணைக்கும் வகையில் உடனடியாக நிரந்தர சாலை அமைக்க வேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட உரிய பாதை இல்லாத நிலை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். தமிழக அரசு உடனடியாக சுற்றுச்சுவரை அகற்றி, ஏ.ஆர். காலனி முதல் மேச்சேரி பிரதான சாலை வரை சாலை அமைக்க வேண்டும். அம்மன் நகர் பகுதியில் உள்ள பஞ்சாயத்து சாலையை மீட்டு, ராமன் நகர் மக்கள் பயன்படுத்தும் வகையில் நீட்டிப்பு செய்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.