முந்தய பக்கம்

மேச்சேரி விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு!

17 Jul 2026, 11:36 pm
மேச்சேரி விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு!
<p><strong>மேச்சேரி விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு!</strong></p><p>சேலம், ஜூலை 17- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மேச்சேரி ஒன்றிய 11 ஆவது மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றிய 11 ஆவது மாநாடு மேச்சேரி கோல் காரனூர் ஸ்டாலின் நினை வகத்தில் மறைந்த முத்து பையன், பி.முருகன், எம்.சுசீலா நினைவரங்கில் வியாழனன்று நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் கே.மாது தலைமை ஏற்றார். மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் பி.பழனிசாமி, பொருளாளர் வி.முத்துசாமி ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து, சிஐடியு கைத்தறி சங்க மாவட்டத் தலை வர் சி.ராமநாதன், விதொச ஒன்றிய பொறுப் பாளர் ஏ.அம்மாசி, பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி, மாற்றுத்திறனாளி சங்க ஒன்றியத் தலைவர் பி.மல்லையன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில், காவிரி-சரபங்க உபரிநீரை ஒன்றிய ஏரிகள் அனைத்திலும் நிரப்பிடல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். இதனை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக பி.பழனி சாமி, செயலாளராக கே.மாது, பொருளா ளராக வி.முத்துசாமி உள்ளிட்ட 19 பேர்கள் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் புஷ்பா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram