சரபங்கா ஆற்றங்கரையில் அளவீடு: விவசாயிகள் வாக்குவாதம்!
9 Dec 2025, 4:25 pm
<p><strong>சரபங்கா ஆற்றங்கரையில் அளவீடு: விவசாயிகள் வாக்குவாதம்!</strong></p>
<p>சேலம், டிச.9- அரசிராமணி பேரூராட்சிக்குட் பட்ட சரபங்கா ஆற்றின் கரையோ ரம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டபோது, விவசாயிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள அரசிராமணி பேரூ ராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டி முதல் செட்டிபட்டி வரையிலான சரபங்கா ஆற்றங்கரையோரம், கடந்த காலத் தில் விவசாயிகளின் வண்டி வாக னங்கள் மற்றும் கால்நடைகள் சென்று வர வசதியாக இருந்த பாதை, மணல் கொள்ளையர்க ளால் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்ப குதி விவசாயிகள் பாதை வசதி யின்றி பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், சர பங்கா ஆற்றங்கரையை அளவீடு செய்து, மீண்டும் பாதை அமைத் துத்தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் பலமுறை போராட்டங்களை நடத்தி வந்த னர். இந்நிலையில், செவ்வாயன்று வருவாய்த் துறையினர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சர பங்கா ஆற்றங்கரையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவ சாயிகள், அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். “ஆற்றை தற்போது அளவீடு செய்தால், சாகுபடி செய்யப்பட்ட விவசாயப் பயிர்கள் சேதமடையும். எனவே, பயிர்களை அறுவடை செய்தபின் அளவீடு செய்ய வேண் டும்” என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அதி காரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், மீண் டும் அளவீடு செய்யும் பணியைத் தொடர்ந்தனர். சிபிஎம் மாநில செயலாளரிடம் முறையீடு இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி தலைமையில், ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து தங்கள் குறைகளை முறை யிட்டனர்.</p>
