மதிமுக தேர்தல் அறிக்கை 2026 மாநில சுயாட்சி ; தமிழர் வாழ்வுரிமையைப் பேசும் ஆவணம்
17 Mar 2026, 3:26 pm

மதிமுக தேர்தல் அறிக்கை 2026 மாநில சுயாட்சி ; தமிழர் வாழ்வுரிமையைப் பேசும் ஆவணம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை, மாநில உரிமைகளையும் தமிழர் நலனையும் முதன்மையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களை 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஏற்ப முன்னெடுக்கும் இந்த அறிக்கையின் சிறப்பம்சங்கள் சில:

அரசியல் மற்றும் மாநில உரிமைகள் இந்திய நாட்டின் பெயரை “இந்திய ஐக்கிய நாடு” (United States of India) என மாற்ற வேண்டும் என்பது மதிமுகவின் மிக முக்கியமான அரசியல் முழக்கம். உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை தவிர மற்ற அனைத்து அதிகாரங்களையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்து கிறது. ஆளுநர் பதவி என்பது மாநில உரிமை களுக்கு முரணானது என்பதால், அந்தப் பதவி யையே அகற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை மதிமுக எடுத்துள்ளது. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மீட்பு தமிழர் வரலாற்றை மீட்டெடுப்பதில் இந்த அறிக்கை தனி கவனம் செலுத்துகிறது. 15,000 ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகார் நகரத்தின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றுவது, கீழடி ஆய்வுகளின் உண்மைத் தன்மையைப் பாதுகாப்பது மற்றும் வைகை ஆற்றின் கரைகளில் சங்க இலக்கிய மரங்களை நட்டு ‘மீட்டுருவாக்கம்’ செய்வது போன்ற திட்டங்கள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொள்ளாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அனைத்து அரசுத் தொடர்புகளும் மாநில மொழிகளிலேயே அமையவும் இந்த அறிக்கை வழிவகை செய்கிறது. பொருளாதார மற்றும் சமூக நலன் உழைக்கும் மக்களின் நலன் காக்க, அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒப்பந்த முறை வேலைவாய்ப்புகளை ஒழித்து, பணி நிரந்தரம் செய்ய மதிமுக குரல் கொடுத்துள்ளது. பெண்களுக்கான மகப்பேறு நிதியுதவியை ₹25,000-ஆக உயர்த்தவும், கைம்பெண்களுக்கு மாதந்தோறும் ₹5,000 உரிமைத் தொகை வழங்கவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு ₹4,000 மற்றும் கரும்புக்கு ₹5,000 என குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.