தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்.சி. ரோடு வணிக வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

4 Oct 2026, 1:06 am
எம்.சி. ரோடு வணிக வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

எம்.சி. ரோடு வணிக வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, அக். 3-ராயபுரம் எம்.சி. ரோடு வணிக வளா கத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் மண்டலம் 5 வட்டார துணை ஆணையர் ஸ்வேதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், ராயபுரம் மாதா கோவில் தெரு வில் 70 அடி ரோடு அகலம் உள்ள இடத்தில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சாலை

யோரம் வியாபாரம் செய்யும் 25 வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்து விற்பனை (இரவு) மண்டலமாக அறிவித்து, அடையாள அட்டை வழங்க வேண்டும்.

எம்.சி. ரோடு வணிகவளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், கடை களுக்கு மேல் கூரையும், கதவும் அமைக்க வேண்டும், பாதுகாப்புக்கு மாநக ராட்சி மூலம் கவலாளி நியமனம் செய்ய வேண்டும்.

வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் அரசு அச்சகம் அருகில் 47 சதுர மீட்டரில் 136 வியாபாரிகள் 20 ஆண்டுகள் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி திறந்த

வெளியில் வியாபாரம் செய்து வந்தார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தியால் விற்பனை மண்டலமாக அறிவித்து, அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மாநகராட்சி மூலம் மாதம் வாடகை வசூல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை முறையாக ஒதுக்கீடு செய்து கட்டி கொடுக்கவில்லை. எனவே தாங்கள் தலை யிட்டு மின் வசதியுடன் கடைகளை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் அலுவலர்களிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடியாக அக்டோபர் 6ஆம் தேதிக்குள் ஆய்வு செய்யுமாறு வலியுறுத்திய அவர், 9.10.2026 அன்று நகர விற்பனை குழு கூட்டத்தை கூட்டி முடிவுகள் அறிவிப்பதாக சங்க நிர்வாகி களிடம் உறுதி அளித்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனைக்குழு உறுப்பினர் கே.பலராமன், ஜி.மோனிஷா, நிர்வாகிகள் எம்.தமிம்சேட், சி.சின்னராஜ், தனபால், ஓவியன், சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.