எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்
24 Jul 2026, 9:14 pm
<p><strong>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்</strong></p><p>சென்னை, ஜூலை 24 - எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண், மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளி யிடப்படும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவ காசம் நிறைவடைந்த நிலை யில், இந்த ஆண்டு மொத் தம் 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு 40,760 விண்ணப்பங் களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,725 விண் ணப்பங்களும் பெறப்பட்டு ள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 72,743 பேர் விண்ணப் பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணை யத்தின் அனுமதியின் பே ரில் மருத்துவப் படிப்புகளுக் கான இடங்கள் இறுதி செய்யப்படவுள்ளன; மாண வர் சேர்க்கை அந்த ஆணை யத்தின் விதிகளின்படி நடத்தப்படும். மாணவர்களின் நீட் மதிப் பெண் விவரங்களை தேசிய தேர்வு முகமையிடமிருந்து பெற்ற பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.</p>
