தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

28 Oct 2026, 8:28 pm
விளையாட்டு

விளையாட்டு

மா சே துங்கை சர்வாதிகாரி என அழைத்த மாப்பே : சீன மக்கள் கடும் எதிர்ப்பு

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான கிலியன் மாப்பே சமீபத்தில் அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரவும் மீம்ஸ் குறித்து பேசினார். அப்போது தனது முகம் சீனாவின் முன்னாள் தலைவர் மா சே துங்கின் (Mao Zedong) முகத்துடன் மார்பிங் செய்யப்பட்டு மீம்ஸ் உருவாக்கப்பட்டது குறித்து மாப்பே,”இது சீன சர்வாதிகாரி போல் சித்தரிக்கிறது” என்று கூறினார்.

சீனாவின் தேசத்தந்தையாகவும், உலகளவில் வரலாற்று நாயகராகவும் மதிக்கப்படும் மா சேதுங்கை “சர்வாதிகாரி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பேசியது சீன மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீன மக்கள் சமூக வலைதளங்களில் இது “தேசிய உணர்வை புண்படுத்தும் செயல்” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விளம்பர ஒப்பந்தங்கள் ரத்து

மாப்பே மீது எழுந்த இந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவருடன் வணிகத் தொடர்பில் இருந்த முன்னணி சீன நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கின. சீனாவின் பிரபல குளிர்பான நிறுவனமான டாங்பெங் (Dongpeng) மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மெங்குயு (Mengniu) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மாப்பே உடனான விளம்பரத் தூதர் ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்தன.

லா லிகா கண்டனம்

அதே சமயம் ஸ்பெயின் நாட்டில் கிளப் போட்டிகளை நடத்தும் லா லிகா அமைப்பு மாப்பேவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மாப்பேவின் கருத்துக்களால் சீன நாட்டு ரசிகர்கள் மற்றும் மக்கள் மனம் புண்பட்டதற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இது அவரது சொந்தக் கருத்துக்களே தவிர, லா லிகாவின் நிலைப்பாடு அல்ல” என்று அதில் கூறப்பட்டுள்ளது. லா லிகா அமைப்பில் அங்கம் வகிக்கும் ரியல் மாட்ரிட் அணியில் மாப்பே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலன் டி ஆர் விருது வழங்கும் விழாவில் மாப்பே, யமால் சர்ச்சை

கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான ‘பாலன் டி ஆர் (Ballon d Or)’ விருதுகள் வழங்கும் விழா இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆடவர் பிரிவுக்கான பாலன் டி ஆர் விருதை இங்கிலாந்து நாட்டின் கேப்டன் ஹாரி கேன் வென்றார்.

பிரான்ஸ் கேப்டன் மாப்பே இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் வீரர் லாம்னே யமால் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மாப்பே, யமால் ஆகிய இருவரும் தங்களுக்கு விருது கிடைக்கும் என்ற ஆவலில் இருந்தனர். ஆனால் ஹாரி விருது தட்டிச் சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டதும் ஹாரிக்கு, அனைவரும் எழுந்து நின்று கைகுலுக்கியும், கட்டியணைத்தும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அவருக்கு அருகே இருந்த மாப்பே, யமால் ஆகிய இருவரும் எழுந்து நின்று மரியாதை நிமித்தமாகக் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அமர்ந்தே இருந்தனர். அதன்பிறகு ஹாரி தானாக சென்று உட்கார்ந்திருந்த இருவரையும் கட்டியணைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹாரி கேன் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்று மூத்த நட்சத்திர வீரர்களில் ஒருவர் ; தலைசிறந்த முன்கள வீரர் ; அமைதியாக கேப்டன் பதவியில் செயல்படும் சிறப்பு உடையவர். ஆனால் விருது கிடைக்காத அதிருப்தியில் மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்காமல், அவரை வெறுப்பேற்றும் செயலில் ஈடுபடுவது பெரும் சரியானது அல்ல என விளையாட்டு ஊடகங்கள், கால்பந்து வல்லுநர்கள் மாப்பே, யமாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.