தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி மயூரி யூனிகோட்டர்ஸ் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

8 Jun 2026, 9:33 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி மயூரி யூனிகோட்டர்ஸ் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி மயூரி யூனிகோட்டர்ஸ் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

“ஒற்றை உற்பத்திப் பிரிவில் வெடித்த விசித்திரப் போராட்டம்”

வேலைநிறுத்தம் 55

சோமு (ஜெய்ப்பூர்), ஜூன் 8 - தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர்க்குணமிக்க தொழிலாளர் வர்க்க எழுச்சி யின் விளைவாக, பல்வேறு தொழிற்சாலை களில் ஊதிய உயர்வும் பணிச்சூழல் மேம்பாடும் எட்டப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் மிகப்பெரிய செயற்கைத் தோல் (Synthetic Leather) தயாரிப்பு நிறுவனமான ‘மயூரி யூனிகோட்டர்ஸ் லிமிடெட்’ (Mayuri Uniquoters Limited) நிறுவனம், தாங்கள் எவ்வித தொழில்துறை மோதல்களும் இன்றி சட்டவிதிகளின் படி ஊதியத்தை மாற்றியமைத்துள்ளதாகக் கூறிக்கொண்டது. ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு தாலுகாவில் உள்ள தோத்சார் (Dhodsar) மெகா உற்பத்தி ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்த ஏமாற்று ஊதிய உயர்வை நிராகரித்து, கடந்த மே மாதம் ஒரு விசித்திரமான பகுதியளவு வேலைநிறுத்தப் போராட்டத்தை (Partial Strike) நடத்தினர். போர்ப்ஸ் ஆசியாவின் (Forbes Asia) ‘ஒரு பில்லியன் டாலருக்கும் குறைவான சிறந்த 200 நிறுவனங்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த மாபெரும் ஆலையில், சுமார் 850 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நிரந்தரத் தொழில்நுட்ப ஊழியர்கள்; மீதமுள்ளவர்கள் அசெம்பிளி, பேக்கிங் மற்றும் லோடிங் போன்ற பிரிவுகளில் மூன்றாம் தரப்பு ஒப்பந்த முகமைகள் மூலம் உறிஞ்சப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.

தொழிற்சங்கமற்ற சூழலும் ஒற்றை லைன் முடக்க உத்தியும்

வரலாற்று ரீதியாக, மயூரி நிறுவனம் தனது ஆலைக்குள் மத்திய தொழிற்சங்கங்களை அனுமதிக்காமல், மேலா ண்மை- தொழிலாளர் குழுக்கள் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தது. இந்தச் சூழலில், கடந்த மே 9, 2026 அன்று ஆலையின் ஒரு குறிப்பிட்ட பிவிசி (PVC) கோட்டிங் உற்பத்திப் பிரிவில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் கருவிகளை அடியோடு முடக்கி (Tool-down) அதிரடிப் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் எந்தவொரு பிரதான தேசிய தொழிற்சங்கத்தாலும் வழிநடத்தப்படவில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தக்காரரின் கீழ் பணிபுரிந்து, கடுமையான ஊதியப் பாரபட்சத்திற்கு உள்ளான தொழிலாளர்கள் தங்களின் உடனடிப் பிரதிநிதிகள் மூலம் தன்னிச்சையாக ஒன்றிணைந்து இப்போராட்டத்தை நடத்தினர்.

மயூரி ஆலையில் மொத்தம் 7 அதிநவீனத் தானியங்கி கோட்டிங் பிரிவுகள் சுயாதீனமாக இயங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது அந்தப் பகுதி மட்டும் முடங்குமே தவிர, அண்டை பிரிவுகளின் இயக்கம் பாதிக்கப்படுவதில்லை. தேசிய தொழிற்சங்கங்களின் கட்டமைப்பு இல்லாததால் ஆலை தழுவிய ஒட்டுமொத்த முடக்கத்தை அவர்களால் அமல்படுத்த முடியாவிட்டாலும், தங்களின் பிரிவின் உற்பத்தியை அவர்கள் முழுமையாக முடக்கினர்.

பங்குச்சந்தை வெளிப்படுத்திய வர்க்கப் போராட்டத்தின் உண்மை

இப்போராட்டம் குறித்து வாட்ஸ்அப், டெலிகிராம் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் எவ்வித வீடியோக்களோ, ரீல்களோ வெளியாகவில்லை. போராட்டம் வெறும் 48 மணி நேரம் மட்டுமே நீடித்ததாலும், ஆலை வாயி லில் பெரிய அளவிலான வன்முறையோ அல்லது போலீஸ் தடியடியோ நடக்காததாலும் உள்ளூர் ஊடகங்களின் கவனம் இதன் பக்கம் திரும்பவில்லை.

இருப்பினும், இந்த மறைமுகப் போராட்டம் உலகிற்குத் தெரியவந்ததற்குக் காரணம் இந்தியப் பங்குச்சந்தையின் கடுமையான விதிமுறைகளாகும். மயூரி நிறுவனம் பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) ஆகிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக இருப்பதால், இந்த வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட உற்பத்தி முடக்கம் மற்றும் சுமார் ₹1.50 கோடி வருவாய் இழப்பு குறித்த ‘விதிமுறை 30’ (Regulation 30) வெளிப்படைத்தன்மை அறிக்கையை செபி (SEBI) அமைப்பிடம் சட்டப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதனால், இப்போராட்டத்தின் வீரியம் மணி கண்ட்ரோல் (Moneycontrol) போன்ற நிதிநிலை இணையதளங்கள் வழியாகப் பகிரங்க மானது.

வென்றெடுக்கப்பட்ட ஊதிய உயர்வும் கூடுதல் உழைப்பு உடன்பாடும்

உற்பத்தி முடக்கத்தால் கார்ப்பரேட் வருவாய் பாதிக்கப்படு வதைக் கண்ட ஆலை நிர்வாகம் மற்றும் துணை ஒப்பந்தக் காரர்கள் உடனடியாகத் தொழிலாளர்களுடன் அவசரப் பேச்சு வார்த்தையில் இறங்கினர். மே 11 அன்று எட்டப்பட்ட முத்தரப்பு உடன்பாட்டின்படி, ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களின் ஊதியக் கட்டமைப்பை உயர்த்தித் தர ஒப்புக்கொண்டனர்; இதற்கான கூடுதல் செலவினங்களை மயூரி முதன்மை நிர்வாகமே ஏற்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது.

இதனைத் தொடர்ந்து, மே 11 முதல் தொழிலாளர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதனால் போராட்டம் தோத்சாரின் பிற பிரிவுகளுக்கோ அல்லது ஜெய்த்புரா (Jaitpura) ஆலைக்கோ பரவாமல் தடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் மீது எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையோ, போலீஸ் புகாரோ அளிக்கப்பட மாட்டாது என உடன்பாடு எட்டப்பட்டது. அதே வேளையில், இந்த 3 நாள் முடக்கத்தில் தேங்கிய 15,000 மீட்டர் செயற்கைத் தோல் உற்பத்தி இழப்பை ஈடுகட்ட, அடுத்தடுத்த நாட்களில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைத்து ஆலையின் விநியோகச் சங்கிலியை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டனர். தங்களின் குறிப்பிட்ட விநியோகப் புள்ளியை ஆயுதமாக்கி, அமைதியான முறையில் தொழி லாளர்கள் வென்றெடுத்த இந்த ஊதிய உயர்வு வர்க்க ஒற்றுமைக்குச் சிறந்த சான்றாகும். தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.