தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிமன்றம் பரிந்துரையின் படி திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் மேயர் ந.தினேஷ்குமார் உறுதி

19 Nov 2025, 3:33 pm
நீதிமன்றம் பரிந்துரையின் படி திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் மேயர் ந.தினேஷ்குமார் உறுதி
<p><strong>நீதிமன்றம் பரிந்துரையின் படி திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும்</strong></p> <p>திருப்பூர், நவ.19- மாநகராட்சியில் நீதிமன்றம் மற் றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிந் துரைகளின்படி திடக்கழிவு மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ந. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சியின் 60 வார் டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மொத்த கழிவு உற்பத்தியா ளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் புதனன்று டவுன் &nbsp;ஹாலில் நடைபெற்றது. மேயர் ந. தினேஷ் குமார், தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாநக ராட்சி ஆணையாளர் எம்.பி.அமித், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள், &nbsp;நிறுவனங் களின் உரிமையாளர்கள் பங்கேற் றனர். இதில் மேயர் ந.தினேஷ் குமார் &nbsp;கூறுகையில், திருப்பூர் மாநகராட் சியில், நாள்தோறும் 258 மெட்ரிக் டன் &nbsp;ஈரக் கழிவுகளும், 315.55 மெட்ரிக் டன் &nbsp;உலர் கழிவுகளும் என மொத்தம் சுமார் 573.55 மெட்ரிக் டன் திடக்கழி வுகள் சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை ஸ்ரீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலம் &nbsp;ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் &nbsp;உள்ள 28 நுண் உரமாக்கல் மையங்க ளில், ஒவ்வொரு மையத்திலும் 5 டன் &nbsp;வீதம் நாளொன்றுக்கு 140 டன் மக்கும் &nbsp;கழிவுகளை உரமாக மாற்றப்படுகி றது. மேலும், உயிரி எரிவாயு மையம் &nbsp;மூலம் தினசரி 10 டன் அளவுள்ள மக்கும் கழிவுகள் எரிவாயுவாக மாற் றப்படுகிறது. மாநகராட்சியில் உள்ள &nbsp;6 உலர் கழிவு மறுசுழற்சி மையங்கள் &nbsp;மூலம் தினசரி 30 டன் அளவுள்ள உலர் &nbsp;கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், &nbsp;மாநகரில் சேகரமாகும் திடக்கழிவு களை சிறந்த முறையில் மேலாண்மை செய்திட செயல் திட் டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தென்னம்பாளை யம், சாந்தி தியேட்டர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு முழுமை யாக மூடப்பட்டுள்ளது. தற்போது நீதி மன்ற வழக்கு உள்ளதால் மாநகர பகுதிகளில் குப்பை எடுக்கப்படாமல் உள்ளது. நீதிமன்றம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துறை களின்படி குப்பையை அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், 6 &nbsp;மாதத்திற்கான செயல்திட்டம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரை வில் நிரந்தர தீர்வு காணப்படும். &nbsp;மேலும், வரும் காலங்களில், மாந கராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து &nbsp;குடியிருப்புகளிலும், 100 சதவீதம் குப் பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்த நிலையில் சேகரிக்கப்படுவது உறுதி செய்யப்ப டும். வார்டு வாரியாக அதிக அளவில் &nbsp;குப்பை குவியும் இடங்கள் கணக்கெ டுக்கப்பட்டு, குப்பைகள் கொட்டப்ப டாமல் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று மாத காலத்திற்குள், குப்பைத் &nbsp;தொட்டிகள் இல்லாத நகரமாக திருப் பூர் மாநகராட்சி மாற்றப்படும். திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில், (Bulk waste generator) களுக்கு திடக்கழிவுகளை மேலாண்மை செய் வது குறித்து உரிய பயிற்சி அளிக்கப் படும். மேலும் பல்க் வேஸ்டுகளை தன்னிச்சையாக குப்பை தொட்டிக ளில் கொட்டினால் கடும் நடவடிக்கை &nbsp;எடுக்கப்படும். மேலாண்மை செய்ய &nbsp;இயலாத நிறுவனங்களிடம், உரிய &nbsp;கட்டணம் பெற்றுக் கொண்டு மாந கராட்சி மூலம், தரம் பிரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு மேலாண்மை செய் யப்படும். மீன் மற்றும் கோழி இறைச் சிக் கழிவுகளை வெளியே கொட்டி னால் முதல் முறை ஆயிரம் ரூபாய் &nbsp;அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். உணவகங்கள் மற்றும் தினசரி காய்கறி சந்தைகளில் இருந்து பெறப்படும் சுமார் 200 மெட்ரிக் டன் ஈரக் கழிவுகளை பயோ கேஸ் ஆக மாற்றுவதற்காக 57.84 கோடி மதிப்புள்ள பயோ- சிஎன்ஜி ஆலையை அமைப்பதற்கு &nbsp;ஒப்புதல் கடிதம் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. உலர் கழிவுகளை &nbsp;கையாள மறுசுழற்சி மையம் அமைக்க போதுமான இடம் இல்லாத தால், கோயம்புத்தூர் மாநகராட்சி யுடன் இணைந்து 200 மெட்ரிக் கொண்ட கழிவுகளிலிருந்து எரிசக்தி &nbsp;உருவாக்கும் திட்டத்திற்கான விரி வான திட்ட அறிக்கையை தயாரிக் கும் பணி தற்போது நடைபெற்று வரு கிறது என தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.