தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விற்பனை செய்ய அனுமதி: அறிவிப்பாணை வழங்கிய மேயர்
6 Jan 2026, 4:23 pm
<p><strong>தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விற்பனை செய்ய அனுமதி: அறிவிப்பாணை வழங்கிய மேயர்</strong></p>
<p>மதுரை, ஜன.6 - மதுரை மாநகராட்சியின் வாழ்வா தார–பொது சுகாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தெருவோர விற்ப னையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய அறி விப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உத்தரவின் பேரில், கீழ சித்திரை வீதி (ஹாஜி மூசா முதல் மதுரை ஆதீனம் வரை) மற்றும் தெற்கு சித்திரை வீதி பகுதிகளில் சிறு வியாபாரம் செய்து வரும் 103 தெரு வோர விற்பனையாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மதுரை தெற்கு மாநகர் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை, சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்–2014-இன் அடிப்படையில் வழங்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தனி யான விற்பனை மண்டலம் அமைக்கப் படும் வரை, அடையாள அட்டை பெற் றுள்ள தெருவோர விற்பனையா ளர்களை அப்புறப்படுத்தவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையை செவ்வாயன்று மதுரை மாநகராட்சி மேயர் (பொ) தி.நாகராஜன் நேரடி யாக தெருவோர வியாபாரிகளிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது சிஐடியு சாலையோர மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட னிருந்தனர்.</p>
