தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெருப்பெரிச்சல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா திருப்பூர் மாமன்றத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவிப்பு

28 Jan 2026, 2:33 pm
நெருப்பெரிச்சல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா திருப்பூர் மாமன்றத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவிப்பு
<p><strong>நெருப்பெரிச்சல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா திருப்பூர் மாமன்றத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவிப்பு</strong></p> <p>திருப்பூர், ஜன.28 &ndash; திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்ச னைக்கு தீர்வு காண நெருப்பெரிச்சல் பகுதி யில் திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா அமைக்கப்படுகிறது. டிசம்பர் 10 ஆம் தேதி இப்பூங்கா செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித் தார். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் &nbsp;புதனன்று மேயர் ந.தினேஷ்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித், மாநகராட்சி துணை &nbsp;மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் மண் டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த 90 நாட்களில் திருப் பூரில் நிலவிவரும் குப்பை பிரச்சனை குறித் தும், இப்பிரச்சனையை கையாள்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் மேயர் &nbsp;தினேஷ்குமார், பவர் பாயிண்ட் பட விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைத்தார். பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு &nbsp;காண்பதற்கும், நெருப்பெரிச்சல் அருகே திடக்கழிவு மேலாண்மைப் பூங்கா அமைத்து &nbsp;குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என் றும் அவர் தெரிவித்தார். இப்பிரச்சனைகளில் மாநகராட்சி நிர்வா கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதாக அனைத்துக் கட்சி மாமன்ற &nbsp;உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதேசமயம் &nbsp;குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ரிய கட்டமைப்புகளை முழுமையாக ஏற்ப டுத்த வேண்டும். அதுவரை விழிப்புணர்வு ஏற் படுத்தவும், அபராதம் விதிப்பதை ஒத்திப் போட வேண்டும் என அதிமுக குழுத் தலை வர் அன்பகம் திருப்பதி கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பி னர்கள் பேசும்போது, குப்பை பிரச்சனையில் ஆட்கள் எண்ணிக்கையையும், வாகனங்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மாற்றுத்திறனாளி பிரதிநிதி இக்கூட்டத்தில் தமிழக அரசின் முடி வின்படி மாற்றுத் திறனாளி ராஜ்கிரண் மாமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டு, இக்கூட்டத்தில் பதவி ஏற்றுக் கொண் டார். அவர் முதல்முறையாகப் பேசும் போது, மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் &nbsp;பயணிக்க 2024 முதல் 2026 வரை பாஸ் கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 31ஆம் தேதியுடன் பஸ் பாஸ் முடிந்து விட்டது என்று, &nbsp;பேருந்துகளில் பயணிக்க நடத்துநர்கள் அனு மதி மறுக்கின்றனர். அரசு இது குறித்து &nbsp;அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக் கும் சுற்றறிக்கை அனுப்பி மாற்றுத் திறனா ளிகள் பஸ் பாஸை அனுமதிக்க வேண்டும் &nbsp;என்று கேட்டுக் கொண்டார். இக்கோரிக் கையை உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.