முந்தய பக்கம்

மயிலானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது

27 Jan 2026, 3:28 pm
மயிலானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது
<p><strong>மயிலானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது</strong></p> <p>ஈரோடு, ஜன.27- ஈரோட்டை சேர்ந்த தொழில திபரும், சமூக ஆர்வலருமான எஸ்.கே.எம்.மயிலானந்தன்-க்கு ஒன்றிய அரசு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்த மயிலானந்தன், பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே பயின்றார். அவர் 1983 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை யாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கி, அதன் நிறுவனத் தலைவரானார். நவீன கிராமப்புற சந்தைப்படுத்தல் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி &nbsp;பெற்றார். குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க, தமி ழக அரசின் மதிய உணவுத்திட்டத்தில் முட் டையை கொண்டு வந்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இவர், 1999 ஆம் ஆண்டு சாமிநாதபுரத்தில் ராஜீவ் நகர், காந்தி நகர் ஆகிய இரண்டு பட்டியலின கிரா மங்களை தத்தெடுத்து, அவ்விரு கிராமங்களை சேர்ந்த முதியோர் களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகளுடன் மருத்துவ வசதிகளையும் இல வசமாக தற்போது வரை வழங்கி வருகிறார். இந்நிலையில், இவ ருக்கு ஒன்றிய அரசு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது. முன்னதாக, மயிலானந்தன் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் (8 முறை), தேசிய பாதுகாப்பு விருதுகள் (2 முறை), விவ சாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு விருது (5 முறை), 1978 ஆம் ஆண்டில் இந்திய ஜேசீஸ் அமைப்பின் தேசிய சிறந்த பத்து பிரிவில் சிறந்த இளம் சாதனையாளர் விருது, தமிழ் நாடு வணிக தனிநபர் பிரிவின் கீழ் சிறந்த வரு மான வரி செலுத்துவேர் விருது (2 முறை) உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram