ஜமாபந்தி முகாமில் மனு அளித்த பொதுமக்கள்
29 May 2026, 12:08 am
<p><strong>ஜமாபந்தி முகாமில் மனு அளித்த பொதுமக்கள்</strong></p><p>மயிலாடுதுறை, மே 28- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் பல ஏக்கர் உள்ள நிலையில், அவையனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அந்த நிலங்களை மீட்டு, விளையாட்டு மைதானமே இல்லாத நூற்றாண்டு பழமையான அரசு நடுநிலைப்பள்ளிக்கு மைதானத்தை அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தவும் இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி முகாமில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கடையூர் அபிராமி பொதுநலச் சங்கத்தின் சார்பில், 57 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனு, சீர்காழி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது.</p>
