மாநில வுஷு போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
16 Jul 2026, 9:56 pm
<p><strong>மாநில வுஷு போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு</strong></p><p>மயிலாடுதுறை, ஜூலை 16 - 23 ஆவது ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ்நாடு மாநில வுஷு போட்டி சென்னை விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக துர்கா, ஆஷிகா, அபிஷா, கவியரசி, தினேஷ், சரவணன் மற்றும் சாம் டேவிட் ஆகிய ஏழு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி புனித தெரசா பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி துர்கா, சரவணன் மற்றும் தினேஷ் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும் மற்றும் அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட வுஷு சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் மாவட்ட வுஷு அணியின் பயிற்சியாளருமான கதிரவனையும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா, மாவட்ட வுஷு சங்க பொருளாளர் ஜெய்சித்ரா மற்றும் காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, குணசீலன், புயல் பாலசந்தர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.</p>
