தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் சடலம் மீட்பு; மயிலாடுதுறையில் ஆணவப்படுகொலை?
30 Jun 2026, 10:29 am

மயிலாடுதுறை அருகே காதலர்கள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதையடுத்து, காதலர்கள் ஆணவப்படுகொலையால் கொல்லப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் பார்த்திபன்(20), ஆதிக்க சமூகத்தை சேர்ந்த திவ்யதர்ஷினி(17) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் தோப்பில் உள்ள கூரை கொட்டகையில் காதலர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காதலர்கள் இருவரும் ஆணவப்படுகொலையால் கொல்லப்பட்டார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆணவப்படுகொலையை தடுப்பதற்கு தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது