தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மயிலாடுதுறையில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட உள்ளிருப்புப் போராட்டம் வெற்றி!

16 Jun 2026, 11:12 pm
மயிலாடுதுறையில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட உள்ளிருப்புப் போராட்டம் வெற்றி!
<p><strong>மயிலாடுதுறையில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட உள்ளிருப்புப் போராட்டம் வெற்றி!</strong></p><p>மயிலாடுதுறை, ஜூன் 16- மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலய நிலத்தில் 50 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளைப் பூட்டி சீல் வைக்க முயன்ற அறநிலையத்து றையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் நடத்திய 6 மணி நேரத் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் வெற்றியில் முடிந்தது. சித்தர்காட்டில் உள்ள அறநிலை யத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் குடியேறி அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமை யான கண்டன முழக்கங்களை எழுப்பினர். புறவழிச்சாலை பணிக்காக நிலங்களை இழந்த மக்களுக்குச்சேர வேண்டிய ரூ.9 கோடி இழப்பீட்டை அறநிலையத்துறை பெற்றுக்கொண்டு ஏமாற்றி யதாகவும், கடந்த மாதம் குத்தாலம் கடைவீதியில் 50 ஆண்டுகளாகச் செயல்பட்ட பேக்கரியை உணவுப் பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்த போதே அடாவடியாகச் சீல் வைத்ததாகவும் போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் வாடகை வேண்டாம் எனக் கூறும் நிலையிலும், கோயில் கணக்கர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ரவி, சரவணன், சித்ரா, ராஜசேகர் உள்ளிட்டோரின் 7 வீடுகள் மற்றும் 2 கடைகளைச் சீல் வைக்க மிரட்டியுள்ளனர். அலுவலகத்திற்குள்ளேயே சமையல் செய்தும், ஒப்பாரி வைத்தும் வினோதமான முறையில் போராட்டம் நீடித்தது. 6 மணி நேரத் தொடர் போராட்டத்திற்குப் பின் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள், புதனன்று நடத்தவிருந்த சீல் வைக்கும் நடவடிக்கையைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்துப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.