காதல் இணையரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்!
30 Jun 2026, 10:22 pm

காதல் இணையரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்!

தரங்கம்பாடி அருகே சாதி ஆணவப் படுகொலை

மயிலாடுதுறை, ஜூன் 30 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தில் தலித் இளை ஞரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தூக்கிலேற்றி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் படித்துக்கொண்டே கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே ஊரில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (17) இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர இருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டுக்குத் தெரிய வரவே இரு குடும்பத்தாருக்கும் இடைக்கும் தொடர்ந்து பிரச்சனை நடந்துள்ளது.

தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள்

இந்தப் பின்னணியில், திங்கட்கிழமையன்று மாலை பார்த்திபனைச் சுற்றி வளைத்த லட்சுமி காந்தன் மற்றும் அவரது சகோதரரான சூரியா மற்றும் சில நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், பார்த்திபன் காயமடைந்த நிலையில், அவரை பொறையாறு அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ள னர். மேலும் தனது மகன் தாக்கப்பட்டது குறித்து, பார்த்திபனின் தந்தை மாரிமுத்து காவல் நிலையத் திலும் புகார் அளித்துள்ளார்.

பொறையாறு போலீசில் புகார்

இதனிடையே, தாக்குதலுக்குள்ளான பார்த்தி பன் வீட்டில் படுத்திருந்த நிலையில், விசாரணைக்கு வருமாறு பார்த்திபன் தந்தை மாரிமுத்துவை பொறையார் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ள னர். அவரும் சென்றுள்ளார். ஆனால், திரும்ப வந்து பார்த்தபோது, மகன் பார்த்திபன் வீட்டில் இல்லை. அதிர்ச்சியடைந்த மாரிமுத்து, மகனுக்கு போன் செய்துள்ளார். பார்த்திபன் தொடர்பில் வர வில்லை. இதனால், மேலும் அச்சமடைந்த மாரி முத்து, பல்வேறு இடங்களிலும் மகனைத் தேடி வந்துள்ளார். அப்போது, நள்ளிரவில் மாரிமுத்துவுக்கு மீண்டும் போன் செய்த பொறையாறு காவல்துறை யினர், திவ்யதர்ஷினியை காணவில்லை என புகார் வந்துள்ளதாக கூறியிருக்கின்றனர். அதற்கு, தனது மகனையும் காணவில்லை என மாரிமுத்து பதிலளித்துள்ளார்.

பிணமாகத் தொங்கிய பார்த்திபன் - திவ்யதர்ஷினி

இந்நிலையில், அதேபகுதியில் ஒரு தோப்பில் உள்ள சிறிய கூரைக் கொட்டகையில் பார்த்திப னும் - திவ்யதர்ஷினியும் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கு வது தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது, பார்த்திபன் - திவ்யதர்ஷினி ஆகிய இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டதால் காவல்துறை யினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது டன், இரு உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய் வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினர் கண்ணீர்

சம்பவம் தொடர்பாக, பார்த்திபனின் பெற்றோர், உறவினர்கள் கூறும் போது.... கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திவ்யதர்ஷினியின் உறவினர்கள் உள்ளிட்ட சாதி ஆதிக்க வெறி யர்கள், பார்த்திபனிடம் தகராறு செய்து வந்தனர். திங்களன்றும் அவர்கள் தாக்கினர். இதுதொடர் பாக, லட்சுமிகாந்தன் அவரது சகோதரர் சூரியா, வசந்த், சூர்யா, முகிலன், செந்தில் ஆகிய 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த சில மணி நேரங்களி லேயே பார்த்திபனையும், திவ்யதர்ஷினியையும் கொடூரமாக தாக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென கண்ணீர் மல்க கூறினர்.