மாயனூர் கதவணைக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு 14 ஆண்டு கால இழப்பீட்டை உடனே வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
yesterday

மாயனூர் கதவணைக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு 14 ஆண்டு கால இழப்பீட்டை உடனே வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

சென்னை, ஜூன் 22- கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைப்பதற்காக நிலம் வழங்கி, கடந்த 14 ஆண்டுகாலமாக இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய தொகையை விரைந்து வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு விடம் இன்று நேரில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தலைமை யில், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணை செயலாளர் எஸ்.துரைராஜ், கரூர் மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், மாவட்ட பொருளாளர் கே.சுப்ரமணியன் ஆகியோர் இந்த மனுவை அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தினர்.

14 ஆண்டுகால வாழ்வாதாரப் போராட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் மற்றும் ரெங்கநாதபுரம் வடக்கு பகுதி யில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டத்திற்காக, கடந்த 2008-ஆம் ஆண்டு 48.04.50 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. நிலம் வழங்கிய விவசாயி களுக்குப் பல ஆண்டு காலமாகியும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட வருவாய் அலுவலரிடமும் பாதிக்கப் பட்ட விவசாயிகள் நேரில் முறையிட்டபோது, இழப்பீடு வழங்குவது தொடர்பான அனைத்துக் கோப்புகளும் சென்னை நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுக்குக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். 2013 சட்டப்படி இழப்பீடு வழங்க கோரிக்கை இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே கடந்த 2025 டிசம்பர் 5 அன்றும் நீர்வளத்துறை முதன்மை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் நீர்வளத்துறை முதன்மை செயலாளரின் கவனத்திற்கு இக்கோரிக்கை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டபடி, 14 ஆண்டுகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை, ‘2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி’ நடப்புத் தேர்தலுக்கு முன்பாகவே விவசாயி களுக்கு விரைந்து வழங்கிட வேண்டும் என்று நீர்வளத்துறை முதன்மை செயலாளரிடம் அளித்த மனுவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.