தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீக்கமற நிறைந்திருக்க... - வித்யாசாகர்

31 Jan 2026, 5:27 pm
நீக்கமற நிறைந்திருக்க... -   வித்யாசாகர்
<p><strong>நீக்கமற நிறைந்திருக்க...</strong></p> <p>அன்பில்லையேல் இவ்வுலகில் எதுவுமேயில்லை &nbsp;உள்ளிழுக்கும் காற்றில் அன்பு கலந்திருக்கையில் தான் &nbsp;வெளியேறும் மூச்சில் கூட நிம்மதி பெருகி நிற்கிறது &nbsp;அன்பிற்குத் தான் நெருப்பில் நின்று &nbsp;நிலவை எண்ணி &nbsp;நதியில் குளிக்கும் சுகத்தை அளிக்கமுடிகிறது &nbsp;அன்பு ஆயிரம் கதவுகள் கொண்ட வாசல் &nbsp;சூழலால் சன்னல்கள் மூடினாலும் அன்பினால் &nbsp;கடவுளின் கதவுகள் கூட திறந்துகொண்டேயிருக்கிறது &nbsp; அம்மா எனும் உயிர்ச்சொல்லிலிருந்து அப்பாயெனும் மந்திரச் சொல்வரை; &nbsp;உள்ளுக்குள் நமக்கான உலகத்தை வாழ்க்கையை மகிழ்ச்சியை கொண்டாட்டங்களை &nbsp;விதைக்குள்ளிருக்கும் ஆலமரங்களைப்போல &nbsp;அடக்கிவைத்திருக்கிறது அன்பு &nbsp; அன்பு வெண்மையைப் போன்றது &nbsp;அன்பு மாசிலா காற்றினைப் போன்றது &nbsp;கையிலடங்கா கடலானது அன்பு &nbsp; அன்பை அடக்கத் தெரிந்தோர்க்கு &nbsp;உலகை ஆளத் தெரிவதைக் காட்டிலும் &nbsp;காக்கத் தெரிந்துவிடும் &nbsp; ஆள்வதிலும் காப்பதிலுமிருக்கும் ஆளுமையின் ஓரிழைப் புரிதல்தான் ஞானத்தின் விடை; அறிவின் தெளிவு; வென்று வியாபித்திருப்பதன் சூச்சுமம் &nbsp; உண்மையில், அன்பின் முடிச்சு &nbsp;இதயத்திலிருந்து அவிழ்க்கையில் அதிகாரம் உடைகிறது &nbsp;மேல்கீழ் அகல்கின்றது &nbsp;விகிதாச்சாரங்கள் அர்த்தமற்று போகிறது &nbsp;முடிவில் &nbsp;மரணத்தை வென்று &nbsp;காலத்திற்கும் &nbsp;காற்றோடும் வெளிச்சத்தோடும் &nbsp;நதியோடும் கடலோடும் &nbsp;வானுக்கும் மண்ணுக்குமிடையே மலைகளென நமைச் சூழ்ந்திருப்பது அன்பு தான்; &nbsp;நான் அன்பைத் தான் வணங்குகிறேன் &nbsp;அன்பைத் தான் நேசிக்கிறேன் &nbsp;அன்பிற்குள் சாதியில்லை மதமில்லை &nbsp;ஆண் பெண் பேதமில்லை &nbsp;நிர்வாணமோ ஆடை அலங்காரமோ அன்பிற்குமுன் அழகில்லை &nbsp;அன்பிற்கு அன்பைத்தவிர எதுமே பெரிதில்லை, யாதுமற்றது எல்லாமுமானது அன்பொன்றே! &nbsp;அந்த யாதுமற்ற எல்லாமுமான அன்பை என் தாய்எனை வயிற்றில் சுமந்திருந்த பொழுதிலிருந்து தேடுகிறேன் &nbsp;கண்மூடி இருக்கையில் தேடி &nbsp;கண் திறந்து மீண்டும் மூடுகையிலும் &nbsp;மூடிய பிறகும் நமக்கு தேடலாய் தேவையாய் &nbsp;உயிருள் நிலைத்திருப்பது &nbsp;அன்பொன்றே; அன்பொன்றே; &nbsp;அது ஆணா? பெண்ணா? மக்களா? உலகா? &nbsp;வானா? மண்ணா? &nbsp;கடலா? காற்றா? &nbsp;வெளிச்சச்சமா? அனைத்துமா???? &nbsp;எல்லாவற்றிற்கும் விடை தேடுகையில், &nbsp;உணர்ந்து பார்த்தால்; ஏதோ இல்லாதவராகவே வாழ்ந்து &nbsp;இல்லாதவராகவே முடிகிறோம் &nbsp; எனவே இருக்குமன்பை தீயள்ளித் தின்பதுபோல &nbsp;மனதினிக்க குடிப்போம் &nbsp;மரம் செடி கொடி காய் பூ உயிர்களென &nbsp;அத்தனையையும் நேசிப்போம் &nbsp; நேசிப்பு நமக்கு திருப்பியளிக்குமத்தனை அன்பிலும் &nbsp;நமக்கு விடையிருக்கும் அல்லது விடையும் தேவையிருக்காது &nbsp;அன்பு நமை கேள்வியற்றவர்களாய் மாற்றிவிடும் &nbsp; பிறகென்ன, &nbsp;மௌனத்திலாழ்ந்து உணர்விற்குள் &nbsp;உண்மையின் வெளிச்சம் போல நிறைந்திருப்போம்; நேசித்திருப்போம்; அன்பு உள்ளிருந்து வெளிபுகுந்து வான் நிறைந்து &nbsp;இப்பிரபஞ்சம் அதுவாகி &nbsp;நமை எல்லாமுமாக மாற்றிவிடும்!! &nbsp; எங்கும் நிறைந்தவண்ணம் நாம் &nbsp;எல்லோரிடத்திலும் எப்போதும் &nbsp;யாவற்றிற்கும் அன்பு செய்வோம் &nbsp; காற்று புகும் இடத்திற்கெல்லாம் காதிருக்கின்றது &nbsp;வெளிச்சம் சூழும் பொருளெங்கும் உணர்வு தொடுகிறது &nbsp;நீர் நிறைந்த உடம்பெங்கும் உயிர்க்கலப்பு நிகழ்கிறது &nbsp;வான் சூழ்ந்த பிரபஞ்சம் கூட &nbsp;அன்பிற்கே அன்பிற்கே காத்திருக்கிறது; &nbsp;எனவே, அன்பொன்றே எல்லாம்; அன்பொன்றே யாதும்; &nbsp;வாருங்கள், அன்பில் பிறந்து &nbsp;அன்பில் முடியாமல் &nbsp;எங்கும் நீக்கமற நிறைந்திருப்போம்!!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.