பாப்புரெட்டியாபட்டியில் மே தின விழா
1 Jun 2026, 10:36 pm
<p><strong>பாப்புரெட்டியாபட்டியில் மே தின விழா</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 1- இராமநாதபுரம் மாவட் டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட பாப்புரெட்டியா பட்டி கிராமத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மே தின விழா நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு பாப்புரெட்டி யாபட்டி கிளைச் செயலாளர் எல்.கருத்திருமன் தலைமை வகித்தார். அழகு ராமசாமி முன்னிலை வகித்தார். மே தினக் கொடியை பெருநாழி சொக்கலிங்கம் ஏற்றி வைத்து தொழிலாளர் தினத் தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.காசி நாததுரை, தாலுகா குழு உறுப்பினர் அ.கண்ண தாசன், கடலாடி விவசாய சங்க செயலாளர் எஸ்.சிவன்பெருமாள் மற்றும் ஆசிரியர் பரமசிவன் ஆகி யோர் மே தினத்தின் வர லாறு, தொழிலாளர் உரிமை கள் மற்றும் சமூக முன்னேற் றத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து பேசி னர். நிகழ்ச்சியில் சித்தையன், உத்தமன், வேல்வாசகம், மாரிச்சாமி, பரமசிவன், முத்துமுருகலிங்கம், அ. சித்தையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் பங்கேற்றனர். இறுதியாக பொன்ராக வன் நன்றி கூறினார்.</p>
