இரண்டு முழக்கங்கள்!
12 May 2026, 11:56 pm

இரண்டு முழக்கங்கள்!

இன்குலாப் ஜிந்தா பாத், பூரண ஸ்வராஜ். இந்த இரண்டு முழக்கங்களை இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது முழங்கியவர் மௌலானா ஷஸ்ரத் மொஹானி. 1921ஆம் ஆண்டு அதாவது 1920இல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தாஷ்கண்ட் நகரில் தோற்றுவிக்கப்பட்ட பின்பு இந்திய அரசியலில் முதன் முதலில் முழங்கியது அவரே.

புரட்சி ஓங்குக! முழு விடுதலை!!

1921 ஆம் ஆண்டு அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் மொஹானியால் உருவாக்கப்பட்டவை இந்த முழக்கங்கள். இதில் இன்குலாப் ஜிந்தாபாத், மாவீரன் பகத்சிங்கும் அவர்களது தோழர்களாலும் பின்னர் கம்யூனிஸ்ட்டுகளாலும் பிரபலமானவை. முழு விடுதலை - என்பது பின்னர் கம்யூனிஸ்ட்டுகளாலும் காங்கிரஸ்காரர்களாலும் முழங்கப்பட்டவை. ஹஸ்ரத் மொஹானி அரசியல்வாதி மட்டுமல்ல உருது கவிஞருமாவார். இந்த இரண்டு முழக்கங்களும் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்! அதனால் மொஹானி என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

மே 13 தோழர் ஹஸ்ரத் மொஹானி நினைவு நாள்