தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்

24 Jul 2026, 9:04 pm
மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்

மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு மவுனமாக இருக்க முடியாது போராட்டக் களத்தில் இணைந்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்

கொச்சி நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தில்லியை தொடர்ந்து, நாடு முழுவதும் மாண வர்கள் - இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டம் அனைத்து தரப்பிலும் ஆதரவு பெறுகிறது.

இந்நிலையில், மாணவர் போரா ட்டத்திற்கு மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆதரவு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் நடைபெற்ற போராட்ட த்தில் அவர் மாணவர்களோடு பங் கேற்றார்.

அப்போது அவர் பேசு கையில், “எனக்கு அரசியலில் ஈடு பாடு இல்லை என்று கூறிவந்தவன் நான். ஆனால், கடந்த சில நாட் களாக நாட்டில் நடக்கும் நிகழ்வு கள் என்னை மிகவும் வேதனைப் படுத்துகின்றன.

மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டு காணாமல் மவுனமாக இருக்க முடி யாது. கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளம் முழுவதும் தில்லி போராட்டக் காட்சிகளால் நிரம்பியுள்ளது.

எல்லோராலும் நேரில் சென்று போராட்டத்தில் கல ந்து கொள்ள முடியாது. ஆனால், நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்வது கூட தில்லியில் போராடும் மாணவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

தில்லியில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர்களும் இருக்கலாம். அவர்களுக்கு அமைதியான முறை யில் நிலைமையை விளக்கிப் புரிய வைக்க வேண்டும். நாம் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

மேலும் பலரை இந்தப் போராட்டத்தின் சகோதரர் களாக மாற்ற வேண்டும். யாரு க்கும் எந்தவிதத்திலும் தொந்தரவு தராத வகையில், நமது சொந்த முறையில் எதிர்ப்பை வெளிப் படுத்துவோம்” என நடிகர் மேத்யூ தாமஸ் கூறினார்.

தேசிய கொடியுடன் கவுரி

மலையாள நடிகை கவுரியும் இந்திய மாணவர் சங்க போரா ட்டத்தில் இணைந்து, மாண வர்கள் - இளைஞர்களுக்கு வலு வான ஒற்றுமையை வெளிப்படு த்தினார். குறிப்பாக இந்த போராட்டத்தின் போது, கவுரி தேசியக் கொடியுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.