முந்தய பக்கம்

சந்தைமேடு பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

5 Feb 2026, 3:40 pm
சந்தைமேடு பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>சந்தைமேடு பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்</strong></p> <p>விழுப்புரம், பிப்.5- திண்டிவனம் சந்தை மேடு பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். திண்டிவனம் சந்தை மேடு பா. உ. ச. நக ரில் நடைபெற்ற மாதர் சங்க கிளை அமைப்பு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு .தமிழ்ச்செல்வி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் தேர்வு கிளைத் தலைவராக &nbsp;சரஸ்வதி, செயலாளராக லட்சுமி, பொருளாளராக அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் சந்தை மேடு பேருந்து நிறுத்தத்தில் நகரப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி, அப்பகுதி மக்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி திண்டிவனம் அரசு போக்குவரத்து பணி மனையின் கிளை மேலா ளரை சந்தித்து மனு கொடுப்பது என்றும்,சந்தை மேடு. பா உ.ச. நகரில் வீடு கட்டி பல ஆண்டுகள் மின் இணைப்பு பெற்று, வரி செலுத்தி வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறை வேற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram