தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க கோரி திருச்சுழியில் மாதர் சங்கம் போராட்டம்

25 Feb 2026, 3:22 pm
கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க கோரி திருச்சுழியில் மாதர் சங்கம் போராட்டம்
<p><strong>கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க கோரி திருச்சுழியில் மாதர் சங்கம் போராட்டம்</strong></p> <p>திருச்சுழி, பிப்.25- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் அமைந்துள்ள இறங்கி முத்தம்மன் கோவி லில் வழிபாட்டு உரிமை &nbsp;வழங்க கோரி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலில் அனைத்து &nbsp;தரப்பு மக்களும் பாகு பாடின்றி திருவிழா நடத்த வும், சம உரிமையுடன் வழி படவும் அனுமதி வழங்க &nbsp;வேண்டும் என போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கோவிலின் மேற்கு &nbsp;பகுதியில் உள்ள வழிபாட்டு &nbsp;பாதையில் அமைக்கப் பட்டுள்ள சுவர் மற்றும் அதில் எழுதப்பட்டுள்ள வாச கங்களை அகற்ற வேண்டும் &nbsp;என்பதும் முக்கிய கோரிக் &nbsp;கையாக முன்வைக்கப் பட்டது. எம்.ரெட்டியபட்டி பகுதி யில் நடைபெற்ற இந்த ஆர்ப் &nbsp;பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் என்.உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கிளை &nbsp;நிர்வாகிகள் தேவி, மஞ்சுளா, &nbsp;சுப்புலட்சுமி, சுதர்சனா தேவி &nbsp;ஆகியோர் முன்னிலை வகித் &nbsp;தனர். மாநில பொதுச் செயலா ளர் ஏ.ராதிகா ஆர்ப்பாட்டத் தைத் தொடங்கி வைத்து பேசினார். மத்தியக்குழு உறுப் &nbsp;பினர் எஸ்.லட்சுமி கோரிக் &nbsp;கைகளை விளக்கி பேசி னார். மாநில துணைத்தலை வர் கே.பாலபாரதி கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மேரி, வேலுமயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.மங்கம் மாள், ராஜேஸ்வரி, முத்த ழகு, முத்துமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.