சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம்</strong></p>
<p>புதுக்கோட்டை, மார்ச் 13- சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும், ஒன்றிய அரசு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரண்யா, சுபாஷினி, மாநகரத் தலைவர் விஜி, பொருளாளர் வடிவுக்கரசி உள்ளிட்டோர் பேசினர்.</p>
