முந்தய பக்கம்

கடலூரில் மனை பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் மனு

12 Dec 2025, 3:12 pm
கடலூரில் மனை பட்டா கேட்டு  மாதர் சங்கத்தினர் மனு
<p>கடலூர், டிச.12- மனை பட்டா கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மனு அளித்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரம் களத்து மேட்டு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடும்பங்களுக்கு மனை பட்டா வழங்க வலியுறுத்தி பண்ருட்டி வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாதர் சங்கத்தின் நகர செயலாளர் அமலா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram