நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை வரவேற்கத்தக்க தீர்ப்பல்ல மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.கே.ஸ்ரீமதி கருத்து
13 Dec 2025, 4:23 pm
<p><strong>நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை வரவேற்கத்தக்க தீர்ப்பல்ல மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.கே.ஸ்ரீமதி கருத்து </strong></p>
<p>கொச்சி கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் அங்க மாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் னால் காரில் வந்த மர்ம கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகையை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக, அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வந்தனர். விசாரணை யில் பெரும்பாவூர் அருகே கூவப் படியை சேர்ந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் உள்பட ஆறுபேர் ஈடுபட்டதும், அவர் நடிகையின் கார் ஓட்டுநராகவும், உதவியாளராக வும் இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பிரபல மலை யாள நடிகர் திலீப்புக்கும், சம்பந் தப்பட்ட நடிகைக்கும் முன்விரோ தம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகையை கும்பல் பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் கூறப் பட்டது. இதையடுத்து பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, பி. மணிகண் டன், வி.பி. விஜயேஷ் மற்றும் எச். சலீம் (வடிவாள் பிரதீப்), திலீப், சார்லி தாமஸ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 85 நாள் கள் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை விசாரித்த எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறி விக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 12 வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. அதில் 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னை விதிக்கப்பட்டது. அவர்கள் சிறையில் ஏற்கனவே இருந்த காலத்தை தவிர மீதமுள்ள காலத்தை தண்டனை காலமாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி ஆறரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பல்சர் சுனி, பதிமூன்றரை ஆண்டுகளில் விடுதலை பெற முடியும். மற்ற வர்கள் சிறையில் இதுவரை இருந்த கால அளவு குறைவு என்பதால் அவர்களது விடுதலை தாமதமா கும். பி.கே.ஸ்ரீமதி அதிருப்தி இந்நிலையில், நடிகை பாலி யல் வன்கொடுமை வழக்கில் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற் கத்தக்கதல்ல என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.கே.ஸ்ரீமதி கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“கேரள மக்கள் நீண்டகாலமாக காத்தி ருந்த கொடூரமான ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால், வர வேற்கத்தக்கதாக இந்த தீர்ப்பு இல்லை. தண்டிக்கப்பட்டுள்ள 6 நபர்கள் மட்டும் சதித்திட்டம் தீட்டி யதாக யாரும் நம்ப மாட்டார்கள். அதில் ஈடுபட்ட திலீப் விடுவிக் கப்பட்டதில் அதிருப்தி உள்ளது. மரண தண்டனைக்கு குறைவான தண்டனைக்குரிய குற்றம் அல்ல நடந்தது. நிர்பயா வழக்குக்கு பிறகு நடந்த மிக கொடூரமான சம்பவம் இது. இந்த வழக்கில் உடனடியாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்வதாக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்” என அவர் கூறினார். தீர்ப்பை முழுமையாக படித்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்ந்து அரசு வழக்கறிஞர் அஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“இந்த வழக்கில் வழங்கப்பட்டிருப்பது மிக குறை வான தண்டனையாகும். சாட்சி யங்கள் இருந்ததால்தான் தண்டனை வழங்கப்பட்டிருக்கி றது. இந்த தண்டனை காலம் என்பது நாடாளுமன்றம் வரைய றுத்ததில் குறைந்த பட்ச தண்டனை யாகும். இது நீதிமன்றத்தின் கொடை அல்ல. அரசுத் தரப்பின் உரிமை. இந்த தீர்ப்பு தவறான முன்னுதாரணத்தை வழங்கி யுள்ளது. தீர்ப்பு விவரங்களை முழு மையாக பார்த்தபிறகே 8 ஆவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் (திலீப்) விடுவிக்கப்பட்டார் என் பதை கூற முடியும்” என அவர் கூறினார்.</p>
